No menu items!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 4 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 4 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை கடந்த 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திருமலை சஸ்பெண்ட செய்யப்பட்டுளளார். திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளராக பணி செய்து வருகிறார். காவல் அதிகாரி திருமலை தவிர சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய 3 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி: சென்னையில் இருந்து இன்று 3,537 பஸ்கள் இயக்கம்

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கியுள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் நாளை முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வெளியூர் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 6 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,437 சிறப்பு பஸ்கள் என அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,537 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 3,686 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சென்னையில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் நீக்கம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ். ராதகிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ் ராதாகிருஷ்ணன், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு பிறகு நீக்கிவிட்டார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்த சர்ச்சையான பதிவு, அக்கட்சியினர் மட்டுமல்லாது,  திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு

மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறையை சார்ந்த வீரக்குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய கடற்படை வீரர்கள் தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதே கடினம்கபில் தேவ்

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இதனையடுத்து சூப்பர் 12 சுற்று நாளை தொடங்க உள்ளது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை குறித்து கருத்து கூறியுள்ள, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில், “டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் கிரிக்கெட் அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் அதை சொல்வது ரொம்பவே கஷ்டம். இப்போது சிக்கல் என்னவென்றால் இந்திய அணி இந்த தொடரில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்குமா என்பதுதான்? என்னை பொறுத்த வரையில் இந்திய அணிக்கான அந்த வாய்ப்பு வெறும் 30 சதவீதம் மட்டும்தான் உள்ளது என நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...