No menu items!

விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய நயன்தாரா

விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய நயன்தாரா

நயன்தாராவின் காதல் கணவர் என்பதால், விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய சுய அடையாளத்தை நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. நயன்தாராவின் மாப்பிள்ளை என்ற பெயர் போய், இயக்குநர் விக்னேஷ் சிவன் என்ற பெயரை வாங்க படாத பாடுபட்டு வருகிறாராம்.

தான் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படம் மூலம் எப்படியாவது தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களின் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிட வேண்டுமென நினைக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

ஆனால் இப்படத்தின் ஆரம்பம் முதலே பிரச்சினைதான். ’எல்.ஐ.சி’ என டைட்டில் வைத்ததுமே. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உங்கள் படத்திற்கு இந்த மாதிரி பெயர் வைத்து எங்களுடைய பெருமையைக் கெடுக்காதீர்கள் என்கிற ரீதியில் எல்.ஐ.சி. நோட்டீஸ் அனுப்பியது.

இந்தப் பிரச்சினை முடிவதற்குள், தனது கணவருக்காக இந்தப் படத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா, மாப்பிள்ளைக்கே டாட்டா காட்டிவிட்டாராம்.

கதைப்படி பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஒரே காரணம், விக்னேஷ் சிவன் எப்படியாவது ஜெயிக்கவேண்டும். படம் நன்றாக ஓட வேண்டும். வசூல் செய்யவேண்டும். அதற்கான ஒபனிங் கிடைக்கவேண்டும். நயன்தாரா இப்படி யோசித்ததால்தான், நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் சம்பள விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால், நயன்தாரா இந்தப் படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு இந்த நடிப்பதில் நயனுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்போது சம்பளத்தைக் குறைத்தால் அதன் பிறகு பழைய சம்பளத்தை வாங்க முடியாது என்ற முன்னெச்சரிக்கைதான் நயனை பின்வாங்க வைத்திருக்கிறது. விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டவும் வைத்திருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்வாசிகள்.


பிரபாஸ் சூப்பர் ஹீரோதான் – எப்படி?

கோலிவுட்டில் ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் மத்தியில் இன்றைக்கு ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் பற்றிதான் பேச்சு அடிப்படுகிறது.

நம்மூரில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என யாராக இருந்தாலும், பிரபாஸூக்கு இணையாக யாருமில்லை என்கிறார்கள்.

அப்படியென்ன சமாச்சாரம் என்று கேட்டால், பிரபாஸ் தன்னுடைய சம்பளத்திற்கு அதிகமாக ஒரு சல்லிக்காசு கூட கேட்கமாட்டார் என்கிறார்கள்.

அதாவது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானால், சம்பளம் பேசுவது வாடிக்கை. அப்படி முடிவான சம்பள தொகைக்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட பிரபாஸ் தயாரிப்பாளர்களிடம் கேட்பது இல்லை. சில ஹீரோக்கள் தங்களுடைய சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட்கள், மேனேஜர், உதவியாளர்களுக்கு அது வேண்டும், இது வேண்டுமென கேட்டு தயாரிப்பாளர்களின் பர்ஸை காலி செய்து விடுவார்கள்.

ஆனால் பிரபாஸ், ஷூட்டிங்கிற்கு தன்னுடைய காரிலேயேதான் வருவார். இவரது டீம் தனி காரில் வந்து இறங்கும். தயாரிப்பாளர்கள் தரப்பில் கேராவேன் கொடுக்கப்படுவதால், வேறு எந்த கூடுதல் பணமும் இவர் கேட்பதில்லை.

சில ஹீரோக்கள் சொந்தமாக கேராவேன் வைத்திருந்தாலும், அதற்கான டிரைவர் பேட்டா, அஸிஸ்டெண்ட் பேட்டா என எல்லாவிதத்திலும் தயாரிப்பாளரிடம் காசை கறந்துவிடுவார்கள்.

பிரபாஸ் ஷூட்டிங்கில் இருந்தால், அவருடைய வீட்டில் இருந்து உணவு வந்துவிடும். தயாரிப்பாளருக்கு சாப்பாடு செலவை வைப்பதில்லை. அதேபோல் அவரது டீமிற்கும் உணவு வந்துவிடும். இவர்கள் மட்டுமில்லாமல் பிரபாஸின் டூப்பாக நடிப்பவர்கள், பவுன்சர்கள், என எல்லோருக்கும் செலவை பிரபாஸே பார்த்து கொள்வாராம்.

இப்படி பலவிதங்களில் தயாரிப்பாளருக்கு தொல்லைக் கொடுக்காத ஹீரோ பிரபாஸ் என்கிறது கோலிவுட் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்கள் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...