No menu items!

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களைப் பெறமுடியும் என்று பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். நான் சொல்கிறேன் தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்.” என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன. எனவே, தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்” என்றார்.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 500 அபராதம்

சென்னையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டில் வந்துள்ளது: முதல்வர் ரங்கசாமி

காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த , முதல்வர் ரங்கசாமி, “காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக குடிநீர் குழாய்களைப் பதிக்க 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக 2,000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளன. காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்படும்” என்றார்.

பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது.

நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...