No menu items!

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்

சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. இதுகுறித்து நீதிபதிகள் விசாரணை நடத்திய நிலையில், 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். “பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, “அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறிய நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஓபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்பட முடியாது இபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் அதிமுக விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த மேல் முறையீட்டு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும் பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார்.  கட்சி விதிகளை மீறி நடக்கிறார். கட்சியை முடக்கும் செயல்பாடுகளாக அவரது நடவடிக்கைகள் உள்ளன. எனவே, ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட இயலாது” என்று கூறியுள்ளார்.

சிலிண்டர் விலை மீண்டும் 50 ரூ. அதிகரிப்பு: ரூ. 1068.50-க்கு விற்பனை

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (ஜூலை 6) முதல் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1068.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 4 மாதங்களில் இது மூன்றாவது உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மே 19 ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.3 உயர்த்தப்பட்டது; அடுத்து மே 7ல் ரூ.50 உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ. 103 உயர்ந்துள்ளது.

இதுபோல் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையும் தற்போது ரூ.18 உயர்த்தப்பட்டுள்ளது.

உடலுறவின் போது மாரடைப்பால் காதலன் மரணம்: காதலி அதிர்ச்சி

நாக்பூரை சேர்ந்தவர் அஜய் பார்டெகி (வயது 28), வெல்டிங் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செவிலியராக பணிபுரிந்து வரும் பெண்ணும் (வயது 23), பேஸ்புக்கில் சந்தித்து, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பார்டெகிவும் அவரது காதலியும் லாட்ஜிற்குச் சென்று உடல் உறவுவில் ஈடுபட்டிருந்த போது திடீரென பார்டெகி சரிந்து விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, பார்டேகி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பார்டேகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சயோனர் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர், “இருவரும் நெருக்கமாக இருந்தபோது பார்டெகி மயங்கி விழுந்ததாக அந்த பெண் கூறினார். உயிரிழந்தவர் எந்த மருந்தையும் உட்கொண்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. பிரதே பரிசோதையில், மாரடைப்பே மரணத்திற்கு முதன்மையான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகளுடன் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 8 மாத காலமாக அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்,  தங்கத்தால் செய்யப்பட்ட காதணி, ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட தரைதளம், சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக 3200 ஆண்டுகள் பழமையான இரண்டு முதுமக்கள் தாழியில் இருந்து மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு என அனைத்து எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கிடைத்துள்ள பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

300 மணி நேர முத்தம்: இன்று உலக முத்த தினம்

முத்தம் என்பது காதலர்களுக்கு இடையே காதலை வெளிப்படுத்துவதாக மட்டும் அல்லாமல் அன்பின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவில் ஒருவரை புதிதாக சந்திக்கும் போதோ அல்லது ஒருவரை பாராட்டும் பொழுது கைகுலுக்குவது போன்று மேற்கத்திய நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்போது கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில், அன்பை முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தும் நாளாக ஜூலை 6-ம் தேதி உலக முத்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினம்தோறும் காதலன் காதலியோ அல்லது கணவன் மனைவியோ முத்தமிட்டுக் கொண்டால் அன்றைய தினத்தில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் சோர்வில்லாமலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற உளவியல் ரீதியான பல நன்மைகளுடன் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் முத்தத்தில் உள்ளது. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்திற்காக 300 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...