ஹன்சிகா மோத்வானி, அமலா பால், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் வரிசையில் இப்போது தாப்ஸியும் தமன்னாவும் இணைய இருக்கிறார்கள்.
அதாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்தாண்டு தங்களது காதலர்களை கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இருவரில் தமன்னா இப்போது தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தாலும், திருமணத்தை முடித்துவிட எண்ணுகிறாராம். தமன்னா வீட்டிலும், விஜய் வர்மா குடும்பத்திலும் இவர்களது காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்களாம்.
இதனால் எங்கே திருமணத்தை நடத்துவது என்று யோசனையில் தமன்னா இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தியப் பிரதமர் மோடி முன் வைத்த, திருமணங்களை வெளிநாட்டில் வைக்காதீர்கள். இந்தியாவிலேயே நடத்துங்கள் என்ற கோரிக்கைக்கு ரகுல் ப்ரீத்சிங் ஒப்புக்கொண்டு கோவாவில் தனது திருமண விழாவை நடத்தினார்.
இவரைப் போலவே தமன்னாவும் இப்போது இந்தியாவில் எங்கு திருமண விழாவை வைக்கலாம் என லோகேஷன்களை தேடி வருவதாக கூறுகிறார்கள். அழகிய சூழலுடன் கூடிய ரிசார்ட்கள் எங்கே இருக்கின்றன என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் தமன்னா விசாரித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
என் மீது இப்படி முத்திரை குத்தலாமா – சமந்தா வேதனை
சமந்தாவுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சினையான ‘மையோசிடிஸ்’ பிரச்சினை இருப்பதாக 2022-ல் அவரே மனவேதனையுடன் வெளியிட்டார்.
மையோசிடிஸ் பிரச்சினைக்கு மருத்துவ தீர்வு காண ஒராண்டுக்கும் மேல் சமந்தா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இப்போது இந்தியாவில் மையோசிடிஸ் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் ப்ராண்ட் அம்பாஸிடராகவும் சமந்தா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது தனது மையோசிடிஸ் பிரச்சினையையும், தனது மனநிலையையும் பற்றி மனம் திறந்திருக்கிறார் சமந்தா. ‘எனக்கு ஏற்பட்ட மையோசிடிஸ் பிரச்சினையை வெளியே சொல்லவேண்டுமென்ற என்ற அழுத்தம் எனக்குள்ளே இருந்தது. ஆனால் அந்த நேரத்தில்தான் நான் ஒரு ஹீரோயினை மையமாக கொண்ட படமொன்றில் நடித்திருந்தேன். அதன் வெளியீடும் முடிவாகி இருந்தது.
அப்போது எனக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலக்கட்டம் அது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் எப்படி சமாளிப்பது என்பதும் எனக்கு தெரியவில்லை.
தினமும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக, தவறான தகவல்களை, வதந்திகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள். மறுபக்கம், என் படத்தயாரிப்பாளர்களுக்கு அந்தப் படத்தின் ப்ரமோஷனுக்கு நான் மிக மிக அவசியமான சூழல். இல்லைன்னா அந்தப்படம் சரியாக ஓடாமல் கூட போகலாம். இதனால்தான் நான் ஒரேயொரு பேட்டி கொடுக்க ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அந்த பேட்டி எடுக்கும் போது, நான் பார்ப்பதற்கு அழகாக இல்லை. எனக்கிருந்த வலியைத் தெரியாத வகையில் என் தோற்றம் இருக்கவேண்டுமென்பதில் சிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டேன். எனக்கு இருந்த மையொசிடிஸ் பிரச்சினையை சமாளிக்க எனக்கு எக்கச்சக்கமான மருந்துகளைக் கொடுத்திருந்தார்கள். அவற்றை நான் கண்டிப்பாக எடுத்து கொண்டே ஆகவேண்டும்.
இந்த சூழ்நிலையில் நான் கொடுத்த பேட்டியை வைத்து, நான் மற்றவர்களின் பரிதாபத்தைத் தேடி கொண்டேன். என்னுடைய சுயநலத்திற்காக எல்லோரும் பரிதாப படும்படியாக இருந்தேன் என்கிறார்கள்.