No menu items!

சூப்பர் 8 – சமாளிக்குமா இந்தியா?

சூப்பர் 8 – சமாளிக்குமா இந்தியா?

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. இந்த சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியா இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் இருக்கும் அணிகளைப் பற்றி ஒரு பார்வை.

இந்தியா:

முதல் சுற்றுப் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. அதிலும் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாய் அமைந்த நியூயார்க் ஆடுகளத்தில் இந்திய வீர்ர்கள் சமாளித்து ஆடிய விதம் பாராட்டுக்குரியது. விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இது கடைசி உலகக் கோப்பை என்பதால், இதில் வென்றாக வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் இருக்கிறார்கள். மற்ற வீர்ர்களும் விராட் – ரோஹித் ஜோடிக்கு கோப்பையுடன் விடை கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

பலம்:

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக அதன் பந்துவீச்சு இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் கூட்டணி பந்துவீச்சில் மிகப்பெரிய தொடக்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் வழங்கி இருக்கிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஹர்த்திக் பாண்டியா, அக்ஷர் படேலின் பந்துவீச்சு இருக்கிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரை நம்பர் 3 பேட்ஸ்மேனாக களம் இறங்கும் ரிஷப் பந்த், இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக செயல்படுகிறார்.

பலவீனம்:

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி, இந்த தொடரில் ஒரு போட்டியில்கூட இரட்டை இலக்க ரன்களை எட்டாதது பேட்டிங்கில் பலவீனமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஆஸ்திரேலியா:

ஏ பிரிவில் இந்தியாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தக் கூடிய அணியாக ஆஸ்திரேலியா பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் போலவே ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரில் ஒரு ஆட்ட்த்தில்கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலம்:


ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பலமே அதன் தொடக்க ஆட்டக்காரர்கள்தான். இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட்டும், வார்னரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் ஆடம் சம்பா அதிகபட்சமாக இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

பலவீனம்:

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் சொதப்பலாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்ச்சாளரான ஸ்டார்க்குக்கு பந்து இன்னும் வசப்படாத்து பலவீனம்.

ஆப்கானிஸ்தான்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும், முதல் 3 ஆட்டங்களில் ஜெயித்ததன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

பலம்:

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் சூப்பராக இருக்கிறது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் (167 ரன்கள்) இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார்.. வேகப்பந்து வீச்சாளர் ஃபரூக்கி, ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சும் அந்த அணிக்கு பலம் சேர்க்கிறது.

பலவீனம்:

வலுவான அணியாக இருந்தாலும், அனுபவமின்மையால் மிக முக்கிய போட்டிகளில் எதிர்ப்பு காட்டாமல் சரண் அடைவது ஆப்கானிஸ்தானின் பலவீனம்.

வங்கதேசம்:

லீக் சுற்றில் நான்கில் 3 போட்டிகளில் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது வங்கதேசம்.

பலம்:

வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், இந்த தொடரில் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 துறைகளிலும் அணிக்கு வலு சேர்க்கிறார்.

பலவீனம்:

ஷகிப் அல் ஹசனைத் தவிர மற்ற அனைவரின் பேட்டிங் ஃபார்மும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக கேப்டன் ஷண்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் அவுட் ஆஃப் பார்மில் இருப்பது வங்கதேச அணியை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...