No menu items!

அம்மாவான அமலா பால்

அம்மாவான அமலா பால்

அமலா பால், ஜகத் தேசாயுடனான தனது இரண்டாம் திருமணம் மூலம் அம்மாவாகி இருக்கிறார். அழகான குட்டிப் பையன் பிறந்திருக்கிறார். தனது இளவரசனுக்கு இலாய் என பெயரும் வைத்துவிட்டார் அமலா பால்.

காதல், கல்யாணம், விவகாரத்து, லிவ் – இன் கிசுகிசு என சர்ச்சைகளில் சிக்கிய அமலா பாலுக்கு நிம்மதி இல்லாமலே போனது. இதனால் பாண்டிச்சேரியில் இருக்கு ஆரோ வில் பக்கமாக தனது ஜாகையை மாற்றினார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் இயற்கை சூழல் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்வது, அங்கே இருந்தபடியே சமூக ஊடகங்களுக்கான ரீல்களை எடுப்பது, விளையாட்டுத்தனமாக சேட்டைகள் செய்வது என்று காலத்தைக் கடத்தி கொண்டிருந்தார்.

டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் பிஸினெஸ்மேனை காதலிப்பதாக தகவல்கள் வெளியாயின. இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாயின. ஆனால் இந்த உறவு இரண்டு வருடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. போலீஸ், புகார், சிறை என டெல்லி நண்பரும் அமலா பாலைவிட்டு ஒதுங்கி விட்டார்.

இந்நிலையில்தான் ஜகத் தேசாயின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைப் பெற்று கொள்வதில் அமலா பால் உறுதியாக இருந்தார். அதனால்தான் உடனடியாக திருமணம் செய்து கொண்டனர். நவம்பர் 2023-ல் திருமணம் செய்து கொண்டார்கள். ஜூன் 2024-ல் மகன் பிறந்திருக்கிறான். இதன் மூலம் திருமணத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என இணையத்தில் நெட்டிசன்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அஞ்சலிக்கு 38 ஆ?

’டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்’ என்று வெளிப்படையாக கூறி அதிர வைத்தவர் நடிகை அஞ்சலி.
பலவருட உறவில் மனம் காயப்பட்டது. உடலும் வருத்தப்பட்ட து என்கிற ரீதியில் அவர் மனமுடைந்து பேசியதில் இருந்து, இங்கே தமிழ் சினிமா பக்கம் அவரை அதிகம் பார்க்கமுடியவில்லை. புதிய படங்களிலும் அவர் ஒப்பந்தமானதாக தெரியவில்லை.

அப்படியானால் அஞ்சலி என்ன செய்கிறார் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அவர் இங்கேதான் இருக்கிறார் என்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தள்ளி காட்டி வைரலாக்கினார் தெலுங்கு சினிமாவின் அதிரிப்புதிரி நடிகர் நந்தமூரி நபாலகிருஷ்ணா.

இங்கே வாய்ப்புகள் இல்லாமல் போனதால், தனது தாய் மொழியான தெலுங்கில் கவனம் செலுத்த ஹைதராபாத்தில் செட்டிலாகி இருக்கிறார் அஞ்சலி. இதுவரையில் தனக்கு துணையாக இருந்த சித்தியை இப்போது தன்னுடன் வைத்து கொள்ளவில்லையாம். சித்தியின் தலையீடு எல்லாவற்றிலும் இருந்ததால், அஞ்சலி முன்பே இழந்தது எக்கச்சக்கமாம்.

தோல்விகள், ஏற்றங்கள், இறக்கங்கள், காதல் முறிவு என எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அஞ்சலிக்கு இப்போது வயது 38 ஆகிறது. இதைக் கொண்டாட யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தாய்லாந்துக்கு கிளம்பிவிட்டார். ஜோடியாக போகும் பட்டயாவுக்கு கூட இவர் தனியாகதான் சென்றாராம்.

தாய்லாந்தில் சுதந்திரப் பறவையாகச் சுற்றி திரிந்தவர் அங்கே கடற்கரை உற்சாக கொண்டாட்டங்களுக்கு அதாவது பீச் பார்ட்டிகளுக்கு புகழ்பெற்ற கோ சமுய் தீவில் தனது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார்.
ஏற்கனவே காதல் காதல் என பட்டது எல்லாம் போதும். இனியாவது தனியாக நிம்மதியாக இருக்கலாம் என்ற மனநிலையில் அஞ்சலி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அட்லி போட்ட பில்லு. ஆடிப் போன அல்லு!

’ஜவான்’ என்ற ஒரே படம்தான். ஹிந்தி சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் நம்மூர் அட்லீ.

1000 கோடி வசூல் செய்த படம் என்பதால், அட்லீயை வளைத்துப் போட ஏகப்பட்ட முயற்சிகள். அதில் அட்லி – அல்லு இணைய இருக்கும் படம் நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

‘புஷ்பா 2’ வெளியான பிறகு அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. இவர்கள் இருவரும் சந்தித்தனர். அட்லீ ஒரு கதையைச் சொல்ல, அது அல்லுக்குப் பிடித்து போனது. இதனால் அடுத்த படத்தை நாம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என முடிவாகி இருந்த நிலையில், இப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சிறிய கருத்துவேறுபாடு என்கிறார்கள்.

வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருந்த அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணியின் படம் ஏறக்குறைய கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எல்லாம் அல்லு அர்ஜூனுக்குப் பிடித்து போய்விட, அடுத்தது சம்பளம் பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அப்போது அட்லீ தனக்கு சம்பளமாக 80 கோடி வேண்டுமென கேட்டாராம். அட்லீ போட்ட சம்பள பில்லை கேட்ட அல்லு அர்ஜூனுக்கு கடும் அதிர்ச்சியாம்.

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லீ இடம்பிடிக்க நானா கிடைத்தேன் என்று அல்லு தரப்பில் பெரும் வருத்தமாம். இதனால் வேறு தயாரிப்பாளர் கிடைப்பார்களா என்று அல்லு தரப்பில் தேடியிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அட்லீ கேட்ட சம்பளத்தைக் கேட்டு அரண்டுப் போய் முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால் அல்லு அட்லீ இணையவிருந்த படம் கைவிடப்பட்டுவிட்டது என்று கிசுகிசுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...