No menu items!

துபாய்க்கு பறக்கும் சிவகார்த்திகேயன்!

துபாய்க்கு பறக்கும் சிவகார்த்திகேயன்!

இசையமைப்பாளர் இமான் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் மெளனம் காத்த சிவகார்த்திகேயன் ஒரு வழியாக ஊடகம் முன்பு வந்து உட்கார்ந்திருக்கிறார்.

ஒரே காரணம், நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வெளியீட்டுக்கு காத்திருக்கும் ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.

ஊடகங்களுடன் பேசிய சிவகார்த்திகேயன், இமானுடனான பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘அயலான்’ சம்பந்தமாகவும், பிற கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து இருந்தார்.

இப்படம் ஜனவரி 12-ம் தேதி 2024 அன்று வெளிவரும் என அப்படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் இப்படம் வெளி வருமா வராதா என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கிறது. இதை தகர்க்கும் விதமாகதான் இசை வெளியீட்டு விழாவை நடத்தியிருக்கிறார்கள்.

இதுமட்டும் போதாது, படத்தை இன்னும் விளம்பரப்படுத்த வேண்டுமென சிவகார்த்திகேயன் தரப்பு விரும்புகிறதாம். அப்படியானால்தான் தற்போது உண்டான இமான் பிரச்சினையிலிருந்து விடுப்பட்டு படத்தை பெரியளவில் திரையிட முடியுமென நினைக்கிறார்களாம். அதற்கு பெரியளவில் ப்ரமோஷன் செய்தால், பழையவற்றை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்றும் திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

இதையடுத்து ‘அயலான்’ ட்ரெய்லரை வெளிநாட்டில் வெளியிட்டால், நன்றாக இருக்கும் என நினைத்த சிவகார்த்திகேயன் அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டாராம்.

துபாயில் நடத்தினால் என்ன என்ற யோசனைக்கு வரக்காரணம், அங்கு விழா நடத்திய ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றிப்பெற்றதுதானாம். இதனால் துபாயில் ட்ரெய்லர் வெளியீட்டை வைத்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது.

வருகிற ஜனவரி 7-ம் தேதி துபாயில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அதற்கான விழாப்பணிகள் ஆரம்பித்துவிட்டன என்றும் கூறுகிறார்கள். இப்படத்தின் துபாய் விநியோக உரிமையை வாங்கிய நிறுவனமே இந்நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

’அயலான்’ படத்தை ‘நேற்று இன்று நாளை’ பட இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பழைய கனவு நாயகிகள் இஷா கோபிகர், பானுப்ரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் என ஒரு குட்டிப்பட்டாளமே நடித்திருக்கிறது.


திருமணமா.. வாயை மூடிட்டு இருங்க – ஷ்ருதி ஹாஸன்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அமைதியாக போய் கொண்டிருக்கையில், பாலிவுட்டின் பிரபலமான ஒர்ரி அவாத்ரமனி ஒரு புது பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார். அது ஷ்ருதி ஹாஸன் தனது ஆண் நண்பரான சாந்தனு ஹஸரிகாவை திருமணம் செய்திருக்கிறார் என்ற பகீர் தகவல்தான்.

இதனால் இன்டர்நெட் அப்படியே பரபரப்பில் பற்றிக்கொண்டது. பலர் ஷ்ருதி ஹாஸனுக்கு வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு சொல்லவே இல்லையே என்று சில பிரபலங்கள் அங்கலாய்க்க, ஷ்ருதி ஹாஸன் பொறுமை இழந்துவிட்டாராம்.

இந்த திருமண பஞ்சாயத்திற்கு ஏதாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நினைத்தவர், தடாலடியாக தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

’அப்படியா… எனக்கு இன்னும் திருமணம் ஆகல. சிலர் ஒவ்வொரு விஷயத்திலும் வெளிப்படையாக இருக்கும்போது, நான் ஏன் என்னோட திருமணத்தை மறைக்கணும்? அதனால் என்னைப் பத்தி தெரியாதவங்க, தயவுசெய்து வாயை மூடிட்டு சும்மா இருங்க’ என்று பதில் அளித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக ஷ்ருதி ஒரு தருணத்தில், ‘திருமணம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு பயமா இருக்கு. அதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அதனால் திருமணத்தைப் பத்தி நான் யோசிக்கவே விரும்பல. நான் அவரோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவரும் நானும் சேர்ந்து வேலைப் பார்க்குறது நல்லா இருக்கும். நாங்க ரெண்டுப்பேரும் சந்தோஷமா இருக்கோம். இது பல திருமணங்களை விட நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்.’ என்று கூறியது நினைவிலிருக்கலாம்.

திருமணம் பண்ணிக்கொள்ளவில்லை. நாங்கள் லிவ்விங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ்கிறோம் என்று ஷ்ருதி ஹாஸனே சொல்லிவிட்டார் என்று ரசிகர்கள் ஷ்ருதிக்கு ஆதரவாக கமெண்ட்களை அடித்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.


அடிக்கடி மும்பைக்குப் பறக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழில் அறிமுகமானப் போது பெரும் ஆரவாரமாக இருந்தார் கீர்த்தி சுரேஷ். முதலில் சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ், பிறகு விஜய் என கொஞ்சம் கொஞ்சமாக கமர்ஷியல் ஹீரோயின் ஆனார்.
ஆனால் அடுத்தடுத்து ஹிட் கொடுக்காததால், அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போனார் கீர்த்தி சுரேஷ். அங்கேயும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவருக்கு தொடர் ஹிட் படங்கள் அமையவில்லை.

இந்நிலையில்தான் ஹிந்திப் பக்கம் போகலாம் என்றவர், ’சைஸ் ஸீரோ’ உடலழகைப் பெற வேண்டுமென டயட்டில் இருந்தார். அவரது அழகும், வசீகரமும் போனதுதான் மிச்சம். அட்டை உறிஞ்சிய உடலைப் போல் கீர்த்தி சுரேஷின் உடல் மாறிவிட்டிருந்தது.

பாலிவுட்டில் இவரது அழகும், சைஸ் ஸீரோ உடலழகு எடுப்படவில்லை. பாலிவுட்டை காரணம் காட்டி தன்னை தேடி வந்த வாய்ப்புகளை சம்பளம் அதிகம் கேட்டு தட்டிக்கழித்தார். இதனால் வாய்ப்புகள் வருவதே நின்றுப் போனது.

இதனால் பெண்களை மையமாக கொண்ட தமிழ், தெலுங்கு வெப் சிரீஸ்களில் நடிக்க கவனம் செலுத்தினார். அதுவும் கூட இரண்டு மூன்று வெப் சிரீஸ்களுக்கு பிறகு வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டதால், இப்போது ஹிந்தி வெப்சிரீஸில் கவனம் செலுத்த இருக்கிறார் என்கிறது அவரது நட்பு வட்டம். பாலிவுட்டின் பிரபல யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இப்போது வெப் சிரீஸ் தயாரிப்பில் இறங்குகிறது. இந்த வெப் சிரீஸ் எப்படியாவது வாய்ப்பை பிடித்துவிட வேண்டுமென தனது ஏஜென்ஸிடம் கூறியிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

மும்பை ஏஜென்ஸியும் கீர்த்தி சுரேஷை அடிக்கடி மும்பைக்கு வருமாறு அழைக்கிறதாம். இதனால் வாரந்தோறும் நாம் மார்க்கெட்டுக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கும் போவதைப் போல, மும்பைக்கு அடிக்கடி பறக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

வருகிற 2024-ல் எப்படியாவது ஹிந்தி வெப் சிரீஸ் மூலம் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று கீர்த்தி சுரேஷ் உறுதியாக நம்புகிறாராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...