No menu items!

சீர்காழி வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

சீர்காழி வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்துள்ளது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

ஜி-20 தலைவர்களுடன் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை: பிரதமர் மோடி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு பாலி நகருக்கு செல்கிறார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்துகொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து பேச உள்ளேன். இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும். இதன்பின், பாலியில் நாளை நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருக்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ்திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு: கே.எஸ். அழகிரி

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு, “கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா ?

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது நாட்டிற்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு. காங்கிரஸ் – திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்” என்று கூறினார்.

ஃபேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து அமேசானிலும் ஆட் குறைப்பு

ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் ட்விட்டரை தொடர்ந்து அமேசான் நிறுவனத்திலும் ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லின்க்ட் இன் (Linkedin) வலைத்தளத்தில் அமேசானை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை பதிவிட்டுள்ளார். “ஒன்றரை வருடங்களாக அமேசான் ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேலை செய்து வந்த என்னை, அதிர்ச்சியளிக்கும் விதமாக பணி நீக்கம் செய்துள்ளனர். நான் மட்டுமல்ல எங்களது மொத்த அணியையும் வேலையை விட்டு நீக்கி உள்ளனர்” என்று அதில் கூறியுள்ளார்.

திடீரென்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்திற்கு முக்கிய காரணமாக உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலையும், பண வீக்கம் மற்றும் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அமேசானின் பங்குகள் கிட்டத்தட்ட 4.3 சதவீதம் அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கணக்கிடுகையில் 889 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இதனால் உலகளவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பணிநீக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகின்றன. இது டெக் கம்பெனி ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...