சினிமா எத்தனையோ நட்சத்திர காதலர்களைக் கடந்திருக்கிறது. கேமராவுக்கு முன்னால் அவர்கள் காதலையும், கேமராவுக்கு பின்னால் அவர்களுக்கு இடையிலான உண்மையான காதலையும் ரசித்திருக்கிறது.
எங்களுக்குள் ஒன்றுமில்லை என்று சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பார்கள். சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து எங்களுக்கு திருமணம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்வார்கள்.
இந்த வழக்கமான காதல் பஞ்சாயத்தில் இப்போது அடிக்கடி அடிப்படும் பெயர் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் ‘கீதா கோவிந்தம்’., ‘டியர் காமரேட்’ என இரண்டுப் படங்களில் இணைந்து நடித்தார்கள். அதிலிருந்தே இவர்களுக்குள் காதல் பற்றிக்கொண்டது என்கிறார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் தங்களை இணைத்து வரும் செய்திகளை இதுவரை மறுக்கவும் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான் என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை. இதனால்தான் இவர்களைப் பற்றிய சந்தேகங்களும், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வமும் பாப்பராசிகளுக்கு அதிகமிருக்கிறது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாள். அன்றுதான் விஜய் தேவரகொண்டா நடித்த ஃபேமிலிஸ்டார் திரைப்படமும் வெளியாகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் இந்தியாவில் எங்கும் பார்க்கமுடியவில்லை. ராஷ்மிகா சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை மட்டும் பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒரு மயில் இருக்கிறது.
கொஞ்சநேரம் கழித்து விஜய் தேவரகொண்டாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருக்குப் பின்னால் ஒரு மயில் இருக்கிறது.
இவர்கள் இருவரும் சொல்லிக்கொள்ளாமல் ஒன்றாக துபாய்க்குப் போயிருக்கிறார்கள் என்று இப்போது நெட்டிசன்கள் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார். கூடிய சீக்கிரமே இவர்கள் இருவரும் இது குறித்து வாயைத் திறக்க வாய்ப்புகள் இருக்கிறது.
விஜய் தேவரகொண்டாவுக்கு வயது 36. ராஷ்மிகாவுக்கு 27. அதனால் சீக்கிரமே ஏதாவது முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்கிறார்கள்.
காதலருடன் சேர்ந்து சிக்கிய பூஜா ஹெக்டே
உச்சத்தில் இருந்த பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்து மூன்று தோல்விப்படங்கள். அவ்வளவுதான் அவரை அப்படியே மறந்துவிட்டது திரையுலகம்.
மார்கெட் காலியானாலும், தனது சம்பளத்தைக் குறைக்க பூஜா ஹெக்டே ஒப்புக்கொள்ளததால் அவரை தேடிவந்த வாய்ப்புகளும் கை நழுவிப் போயிருக்கின்றன. அப்படியொரு வாய்ப்புதான் ‘பையா 2’.
வாய்ப்புகளுக்காக கலர் கலராக, வித விதமாக கவர்ச்சியாக புகைப்படங்களையும், காணொலிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டாலும், ஒன்றும் செல்லுபடியாகவில்லை.
இதனாலோ என்னவோ பூஜா ஹெக்டே வெளியே எங்கேயும் தலைக்காட்டவில்லை. இப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் பூஜா ஹெக்டேவுக்கும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கும் திருமணம் என்று ஒரு கிசுகிசு கசிந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் பாலிவுட் நடிகரான ரோஹன் மெஹ்ராவுடன் பூஜா ஹெக்டேவுக்கு காதல் என்று இப்போது ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கிறது. இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக சேர்ந்து காரில் வலம் வருவது, ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என சுற்றுவது என இருக்கையில் பாப்பராசிகளிடம் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் காரில் செல்வதை யாரோ படம்பிடித்து சமூக ஊடகத்தில் போட்டுவிட இப்போது இவர்களது காதலைப் பற்றிய செய்திகள் பற்றியெறிகின்றன.
ரோஹன் மெஹ்ரா இன்னும் பாலிவுட்டில் பெரியளவில் ஹிட் எதுவும் கொடுக்கவில்லை.