No menu items!

ரஜினி சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது: ‘Jailer’ சூப்பர் சுப்பு

ரஜினி சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது: ‘Jailer’ சூப்பர் சுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் ‘ஹுகும்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. இந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு. ரஜினிகாந்த் ரசிகரான இவர் ‘ஜெயிலர்’ படத்தில் இன்னொரு பாடலையும் எழுதியுள்ளார். ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்தார் சூப்பர் சுப்பு.

‘ஜெயிலர்’ பாடல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

அனிருத்தோடு எனது பயணம் ஹுகும் பாடலில் தொடங்கியது இல்லை. அவரும் நானும் நீண்ட காலமாக நண்பர்கள். அனிருத் இசையில் சமந்தா நடிப்பில் வெளியான ‘யுடர்ன்’ ப்ரோமோ பாடலை எழுதியது நான்தான். அனிருத்துக்கு பல்வேறு விளம்பர பாடல்களையும் எழுதியுள்ளேன். அப்போதே அனிருத், தலைவருக்கு நான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடல் எழுத உங்களுக்கு வாய்ப்பு உண்டு என்றார். சொன்னதை இன்று செய்தும் காட்டியுள்ளார்.

ரஜினிக்கு பாடல் எழுதிய அனுபவம் எப்படியிருந்தது?

நான் வரிகள் எழுதும் போது, இப்படி எழுதினால் ஹிட் ஆகும், வைரல் ஆகும் என்றெல்லாம் நினைத்து எழுதவில்லை. தலைவர் ரசிகனாக நான் எப்படி அவரை ரசித்தனோ அப்படியே எழுதினேன். மக்கள் இந்த அளவுக்கு ஆதரவு தந்தது சந்தோஷமாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் ஆனது ஏப்படி?

நான் சிறுவயதில் இருந்தே தலைவர் ரசிகன். தோல்வியையும் வெற்றியையும் எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்பதை அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அதை ரசிப்பேன்.

தலைவர் வாய்ஸ் நோட் மூலமாக பாராட்டியது எதிர்பாராதது. அவருடைய குரல், சொன்ன வாரத்தைகள் என்றும் மறக்கமுடியாது.

சுப்பு எப்போ சூப்பர் சுப்பு ஆனார்?

சூப்பர் சுப்பு என்ற பெயருக்கு பின்னால் எந்த கதையும் இல்லை. சமூக வலைதளங்களில் இப்போது பாசிட்டிவ்வை விட நெகட்டிவ் தான் அதிகமாக பரவுகிறது. இந்நிலையில், என்னை பாசிட்டிவ் ஆக வைத்துகொள்ள என்னை சுற்றிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துகொள்ள ‘சூப்பர்’ என்ற பெயரை சேரத்துகொண்டேன்.

உங்களுக்கு பிடித்த பாடலாசிரியர்கள்?

கண்ணதாசன், வாலி எழுதிய பாடல்களை அதிகமாக ரசிப்பேன்.

எடிட்டர், கதையாசிரியர், டைரக்டர், ரைட்டர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் பணியாற்றுகிறீர்கள். எதுவாக மாற ஆசைப்படுகிறீர்கள்?

இதுவாகத்தான் ஆக வேண்டும் என்று குறிப்பாக எதுவும் இல்லை. டைரக்டர் ஆகி வெற்றிப் படம் எடுக்க வேண்டும் என்று முன்பு இருந்தது. ஆனால், இப்போது செய்யும் வேலையை சிறப்பாக செய்தால் போதும் என்ற மனநிலை வந்துவிட்டது. எது செய்தாலும் அந்த வேலையை முழுமையாக செய்ய வேண்டும் என்று தான் நினைப்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...