’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற பழமொழி ஒன்று உண்டு. அதற்கு சரியான உதாரணமாகி இருக்கிறார் ரஜினி.
அடுத்தடுத்து சில சுமாரான படங்களைக் கொடுத்தாலும், ஜெயிலர் மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ரஜினி.
வெளியாகி மூன்று வாரங்களில் ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் ஏறக்குறைய 475 கோடியைத் தொட்டிருக்கிறது. கடந்த வருடம் வசூலில் சாதனைப் படைத்த கமலின் ’விக்ரம்’ வசூலை இப்போது ஜெயிலர் ஓரங்கட்டியிருக்கிறது.
இன்னுல் சில நாட்களில் இப்படத்தின் வசூல் 500 கோடியைத் தொட்டுவிடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
அப்படியொரு சூழல் வந்தால் தமிழ் சினிமா உலகில் 500 கோடி வசூல் என்ற மாபெரும் இலக்கை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘ஜெயிலர்’ பெற்றுவிடும்.
இப்படி வசூலில் ஜெயிலர் மூச்சிரைக்காமல் ஓடுக்கொண்டிருந்தாலும், இதன் திருட்டு காப்பி இணையத்தில் அதிகம் உலா வருகிறது. இதனால் ஒடிடி-யில் ஜெயிலரை ஸ்ட்ரிமிங் செய்யும் திட்டத்தில் ஒரு மாற்றத்தை சன் டிவி மேற்கொள்ள் இருக்கிறதாம்.
அதாவது ஒடிடி-யில் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு ஸ்ட்ரீமிங் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்த சன் பிக்சர்ஸ், பைரஸி காரணமாக திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே அதாவது செப்டெம்பர் 7-ம் தேதியே ஒடிடி-யில் வெளியிட்டு விடலாம் என யோசனையில் இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.