தமிழ் சினிமாவில் இப்படியொரு கில்லாடியைப் பார்த்ததே இல்லை என்று சொல்லுமளவிற்கு உச்சத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களில் விஜய், கமல், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என பெரிய தலைகளை வளைத்துப் போட்டவர் தனது ஆறாவதுப் படத்தில் இப்போது உச்ச நட்சத்திரம் ரஜினியையும் வைத்து இயக்கவிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் காரணம் அவரது ’கைதி’ பட கதாப்பாத்திரங்களை தனது அடுத்தடுத்தப் படங்களில் பயன்படுத்தியிருப்பதுதான். விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’வில் எல்சியூ இருக்காது, விஜய் தன்னுடையப் படத்தில் மற்ற ஹீரோக்கள் இருப்பதை விரும்ப மாட்டார் என்று எல்லோரும் யோசித்த நிலையில், கமலையும் விஜயுடன் கைக்கோர்க்க வைத்துவிட்டார்.
இப்போது ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ், அந்தப் பட டிஸ்கஷனில் இறங்கிவிட்டார்.
இப்போது இதில் ரஜினியுடன் கமலையும் சேர்ந்து நடிக்க வைக்கும் வகையில் தனது எல்சியூ-வை பயன்படுத்த இருக்கிறாராம். ரஜினி படத்தில் நடிக்க கமலும் ஏறக்குறைய ஒகே சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள்.
லியோவில் கமலின் குரல் மட்டுமே இடம்பெற்றது. ஆனால் ’தலைவர் 171’ [] படத்தில் கமல் திரையிலேயே தோன்ற இருக்கிறார் என்கிறார்கள். மேலும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுமார் 7 நிமிடங்கள் இருக்கும் வகையில் திரைக்கதை உருவாகி வருகிறதாம்.