No menu items!

கிளென் மேக்ஸ்வெல் – கிரிக்கெட் உலகின் புதிய சக்ரவர்த்தி

கிளென் மேக்ஸ்வெல் – கிரிக்கெட் உலகின் புதிய சக்ரவர்த்தி

ஒரே போட்டியில் உச்சகட்ட புகழை எட்டியிருக்கிறார் கிளென் மேக்ஸ்வெல். டி காக், முகமது ஷமி, விராட் கோலி என்று இந்த உலகக் கோப்பையில் இதுவரை நாயகர்களாக வலம்வந்த அனைவரையும் ஒரே இன்னிங்ஸில் ஓரம்கட்டி இருக்கிறார். 1983-ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் அடித்த 183 ரன்களை நினைவுபடுத்தும் விதமாக ஒரு உக்கிரமான இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் புதிய சக்ரவர்த்தியாய் மகுடம் சூடியிருக்கிறார் கிளென் மேக்ஸ்வெல்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் களம் இறங்கும்போதே மேக்ஸ்வெலின் உடல் ஃபிட்டாக இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் கோல்ஃப் மைதானத்தில் ஒரு வாகனத்தில் இருந்து வீழ்ந்ததில் காயமடைந்திருந்தார் மேக்ஸ்வெல் அந்த காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாத நிலையில், சுழற்பந்து வீச்ச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில் மேக்ஸ்வெல் ஆடினால் நன்றாக இருக்கும் என்று அணி நிர்வாகம் நினைத்ததால் ஆட வந்திருக்கிறார்.

இந்த போட்டியைப் பொறுத்தவரை மேக்ஸ்வெலின் பேட்டிங்கைவிட அவரது சுழற்பந்து வீச்சுக்குதான் ஆஸ்திரேலியா முக்கியத்துவம் கொடுத்திருந்தது. ஆப்கானை தனது சுழற்பந்து வீச்சில் மேக்ஸ்வெல் கட்டுப்படுத்தினால் போதும், பேட்டிங்கை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்த்து. அவரும் 10 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார்.

அத்துடன் அவர் பணி முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைக்க, அதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய விக்கெட்களை ஆப்கான் பந்துவீச்சாளர்கள் கொய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் என்ற இக்கட்டான நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட, ஏற்கெனவே காயம்பட்டிருந்த மேக்ஸ்வெல் களம் இறங்கினார். அப்போதுகூட அவர் ஆணியை கரைசேர்ப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. ஆனால் மேக்ஸ்வெல் உறுதியாக போராடினார்.

பேட்டிங்கின்போது இரு கால்களிலும் தசைப்பிடிப்பும், முதுகுப்பிடிப்பும் ஏற்பட மேக்ஸ்வெல்லால் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. ஐசிசியின் புதிய விதிப்படி பேட்ஸ்மேன்கள் பை ரன்னரை வைத்துக்கொள்ள முடியாது என்பதால் மேக்ஸ்வெல்லால் பை ரன்னர் வைத்துக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல்லால் நடக்கக்கூட முடியவில்லை. அவரை மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு பயிற்சியாளரும், கேப்டன் கம்மின்ஸும் அறிவுறுத்தினர். அடுத்த பேட்ஸ்மேனாக களம் இறங்க தயாராகுமாறு ஆடம் ஜம்பாவுக்கு கேப்டன் கம்மின்ஸ் சிக்னல்கூட அனுப்பினார். ஆனால் ஆட்டத்தை முடிக்காமல் வெளியேற மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்த மேக்ஸ்வெல், அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை ஆஸ்திரேலியா வசமாக்கினார். 201 ரன்களைக் குவித்து, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த இன்னிங்ஸைப் பற்றி குறிப்பிட்டுள்ள மேக்ஸ்வெல், “நான் அந்த இன்னிங்ஸில் உறைந்து போய் இருக்கிறேன். இதிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் நாட்கள் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு மட்டுமா?… நமக்கும்கூட அந்த இன்னிங்ஸில் இருந்து வெளியில் வர சில நாட்கள் ஆகும்.

ஆரம்பத்தில் இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை மீட்கும் என்ற நம்பிக்கை யாருக்கும்ம் இல்லை. அவ்வளவு ஏன் மேக்ஸ்வெல்லுடன் ஆடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸுக்கு இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...