No menu items!

ரஜினி – அஜித் ரசிகர்கள் கோபம்

ரஜினி – அஜித் ரசிகர்கள் கோபம்

ரஜினிகாந்த்  நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராக இருக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு  ஜூன் மாதத்தில் நடக்கும் என்று ரசிகர்கள் அதிக  எதிர்பார்ப்பில் இருந்தனர்.  ஆனால் இந்த மாதம் படப்பிடிப்பு நடக்காது என்பது உறுதியாகியிருக்கிறது.   ரஜினியே  இமயமலை பயணத்தின் இடையே  தனது 171 வது திரைப்படத்தின் பணிகள் இந்த மாதம் தொடங்க இருப்பதை வெளிப்படையாக ஆறிவித்திருந்தார்.  ஆனால் படக்குழுவினரிடமிருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து  ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவித்து  வருகிறார்கள்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மீது  ரஜினி ரசிகர்களுக்கு லேசான வருத்தும் இருந்து வந்தது.  உதவி இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்ட பருந்து, காகம் ஸ்டேட்மெண்டை  ரஜினி ரசிகர்கள் இன்னும் மறக்க வில்லை. . இந்த நிலையில்  ரஜினியே சொல்லியும்  இந்த மாதத்தில் படப்பிடிப்பு  தொடங்காதது குறித்து ரசிகர்கள் கோபத்தைக் காட்டி வருகிறார்கள்.;  லோகேஷ் தனது திரைக்கதையில் விவரித்த்கிருந்த சில ஐடியாக்களை ரஜினி  ஓகே சொல்லியிருந்தும் கடைசி நேர கதை விவாதத்தில் அதை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினியை கேட்காமல் இதனை செய்ய முடியாது என்பதால் இமயமலை பயணம் முடிந்து அவர் வரட்டும் என்று காத்திருந்தார்கள் என்றும். தற்போது லோகேஷ் சொன்ன திருத்தத்துடன்  மீண்டும் கதையையை வலுவாக்க்கும் வேலைகள் நடப்பதால்,   உடனே படப்பிடிப்பை தொடங்க  முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதே போல அஜித் ரசிகர்களும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் கிடைக்காமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எப்போதும்  அஜித் திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் கேட்டு பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர்களுக்கு, அஜித் இது பற்றி எந்த கவலையும் படாமல் அடுத்து படத்தில் ஈடுபடப் போகிறார் என்ற தகவல் அவர்களுக்கு  ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. 

பொதுவாக இயக்குனர் மகிழ் திருமேனி திரைப்படங்களில் சண்டைக்  காட்சிகளை  அதிக மெனக்கெட்டு எடுப்பார். அதன்படி  படப்பிடிப்பு தொடங்கிய  அஜர்பைஜான் நாட்டில்  இதுவரைக்கும்  சினிமா எடுக்கப்படாத இடங்களில்  சண்டைக் காட்சிகளை எடுத்தார்.  இதற்கே பல கோடிகளை செலவிட்டது தயாரிப்பு நிறுவனம்.  இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனமான லைகாமீது நடத்தப்பட்ட ரெய்டில்  படக்குழு பெரிய பின்னடைவு சந்தித்தது.   இதனால் படப்பிடிப்பு  தாமதம் ஆனது. படத்திற்காக  அஜித்  கொடுத்த  நாட்களை விட அதிக நாட்களை ஆனது..  அதோடு இயக்குனர் மகிழ்திருமேனி  சண்டைக் காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அஜித்திடம் வைத்திருக்கிறார். இதில்  அஜித்திற்கு மன வருத்தம் என்கிறார்கள். 

இந்த யோசனையை  தயாரிப்பு தரப்பும் விரும்பவில்லையாம். ஏற்கனவே படத்திற்கான பட்ஜெட் திட்டமிட்டதை விட்டு தாண்டி அதிக செலவு ஆகியிருக்கிறது என்பதால் மீண்டும் பெரும் பணத்தை இறக்க தயக்கம் காட்டியிருக்கிறது தயாரிப்பு தரப்பு  இதுவும் விடாமுயற்சி தாமதமாவதற்கு காரணம் என்கிறார்கள். 

எப்படியாவது தீபாவளிக்கு  படத்தை வெளியிட வேண்டும் என்று கூறி வந்தனர். படத்தின் பல பணிகள் முடிக்கப்படமாலிருக்கும் நிலையில்  திட்டமிட்ட நாளில் விடாமுயற்சி வெளியாகது என்றே சொல்லப்படுகிறது.  இது எல்லாம் அஜித் ரசிகர்களையும் வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ரஜினி – அஜித் ரசிகர்களின் இந்த கோபத்திற்கு  முதல் காரணம் இயக்குனர்கள்தான் என்கிறார்கள்.

கதையை ஆழமாக யோசிக்காமல் காட்சிகளின் பிரமாண்டத்தைக் காட்டி  ரசிகர்களை திருப்திபடுத்த நினைப்பதும், .  பல வெளிநாடுகளை  தேடி செல்ல வேண்டியிருக்கிறது.  ஹாலிவுட் திரைப்படங்களின் காட்சியைப் போல இருக்க வேண்டும் என்று யோசிப்பதும்,   இந்த கால தாமதத்தி்ற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இது படத்தின் இயல்பு தன்மையை மீறி படம் பார்ப்பவர்களின் மனதில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் படம் கலவையான விமர்சனத்தை சந்கிக்கிறது. இதன் மூலம் திரையுலகிற்கு  பெரும் உழைப்பும், பணமும்  விரயமாதை தவிர்க்க முடியாது என்று கவலைதெரிவிக்கிறார்கள் திரையுலகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...