No menu items!

Politricks – அமித் ஷா to அண்ணாமலை – என்ன பேசினாங்க?

Politricks – அமித் ஷா to அண்ணாமலை – என்ன பேசினாங்க?

தமிழக அரசியலில் இன்று சர்ச்சையை கிளப்பிய விவகாரங்களில் தலைவர்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்…

அதிமுக – பாஜக கூட்டணி விவகாரம்

அமித் ஷா

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்.

டி.ஜெயக்குமார்

கூட்டணிக்கான கதவுகளை பாஜக திறந்து வைத்திருக்கலாம், ஆனால் அதிமுக. கதவை மூடிவிட்டது. பாஜக யாருக்கு வேண்டுமானாலும் கதவுகளை திறந்து வைத்திருக்கட்டும். தமிழ்நாட்டில் பாஜகவை யாரும் விரும்பவில்லை. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது.

ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய நல்ல மனதைக் காட்டுகிறது. பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்.

ஆர்.எஸ்.பாரதி

அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதேபோல் அதிமுக – பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட இங்கே யாருமில்லை.

எல்.முருகன் Unfit விவகாரம்:

அண்ணாமலை

திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து “அன்பிட்” என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார். பார்லிமென்டில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இவ்வாறு கூறியிருக்கிறார்.

பிட்டான அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிட்டான அமைச்சரா?.

இல்லை பணக்காரர்களாக இருந்தால் பிட்டான அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் “அன்பிட்” அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் “அன்பிட்டா”?. இது வாய்க்கொழுப்பு மட்டுமல்ல. ஆணவத்தின் உச்சம். அரசியலில் “பிட்” மற்றும் “அன்பிட்” என்பது மக்கள் முடிவு செய்வதுதான். எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

டி.ஆர்.பாலு

அண்ணாமலைக்குப் பதில் சொல்லுமளவுக்கு நான் Cheap ஆகிட்டேனா… நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட ஆ.ராசாவும் தலித் தான். அப்படியென்றால், ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் (எல்.முருகன்) பேசலாமா… தலித் என்பதை பார்த்ததெல்லாம் நான் பேசல. கேட்ட கேள்விக்கு அந்தத் துறை அமைச்சரோ, துணை அமைச்சரோ பதில் சொல்லலாம். மீன்வளத்துறை துணை அமைச்சருக்கும் (எல்.முருகன்) இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம்… எங்களைப் பொறுத்தவரை சாதி, மதம் கிடையாது. இதை அவர்கள் அரசியல் ரீதியாக பேச ஆரம்பித்தால், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...