No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்


ஊன்சாய் (இந்தி) – ஜீ5

நண்பனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வயது முதிர்ந்த 3 நண்பர்கள் அவரது அஸ்தியை எடுத்துக்கொண்டு இமயமலைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். மலையேறும் அனுபவம் இல்லாத அவர்கள், தங்கள் முதுமையின் சவாலையும் கடந்து தங்கள் லட்சியத்தை எப்படி அடைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விதமாக நண்பர்களில் ஒருவரின் இளவயது காதலியும் சவால்மிக்க இந்த பயணத்தில் பங்கேற்கிறார்.

பாலிவுட்டின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அனுபம் கெர், பொம்மன் இரானி ஆகியோர் மலையேறும் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆக்‌ஷன், காதல் டைப் படங்களைப் பார்த்துப் போரடித்துப் போனவர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியான இப்படம் இப்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. நாய்களைக் கடத்தி, அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் வடிவேலு ஒரு கட்டத்தில் பிரபல தாதாவான ஆனந்த்ராஜின் நாயைக் கடத்துகிறார். இதனால் கோபமடையும் ஆனந்த்ராஜ், வடிவேலுவைக் கொல்ல திட்டமிடுகிறார். அவரிடம் இருந்து வடிவேலு தப்பித்தாரா என்பதுதான் படத்தின் மையக் கதை.

இந்தக் கதையை வைத்து ரசிகர்களை சிரிக்கவைக்க வடிவேலும் அவரது டீமும் முயற்சி செய்கிறது. ஆனால் தன் முந்தைய கால படங்களைப் போல் வடிவேலுவால் இப்படத்தில் ரசிகர்களுக்கு கிச்சு கிச்சு மூட்ட முடியவில்லை என்பதே உண்மை. அதிகம் சிரிப்பு வராவிட்டாலும் வடிவேலுவுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

சவுதி வெள்ளக்கா (மலையாளம்) – சோனி லைவ்

சென்னையில் கடந்த மாதம் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற படமான ‘சவுதி வெள்ளக்கா’ இந்த வாரம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் பெறும் ஒரு இளைஞனைச் சுற்றிய கதைதான் ‘சவுதி வெள்ளக்கா’. லுக்மான் அவரன், பினு பப்பு, சுஜித் சங்கர் மற்றும் அறிமுக நாயகி தேவி வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் வழக்காடு மன்றங்களின் அவல நிலை, வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதால் சாதாரண மக்கள் படும் அவஸ்தை ஆகியவை இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது

ஏஜெண்ட் கண்ணாயிரம் (தமிழ்) – சன் நெக்ஸ்ட்

பிரைவேட் டிடெக்டிவாக இருக்கும் கண்ணாயிரம் (சந்தானம்) தனது தாயின் இறப்புச் செய்தி அறிந்து சொந்த ஊருக்கு செல்கிறார். ஆனால் அவர் செல்வதற்கு முன் அவரது உடலை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். சொத்து பிரச்சினைக்காக தன் சொந்த ஊரில் சிறிது காஅலம் அவர் தங்கியிருக்க வேண்டி வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஊரில் அடையாளம் தெரியாத சடலங்கள் மர்மமான முறையில் ரயில்வே ட்ராக்குகள் பக்கத்தில் கிடக்கும் தகவல் காட்டுத்தீயாக பரவுகிறது. இதை துப்பறிய களமிறங்கும் சந்தானம், இதற்கான காரணத்தையும், அதற்கு பின்னால் உள்ள குற்றங்களையும் எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமாக காமேடி டிராக்கில் பயணிக்கும் சந்தானம், இப்படத்தில் சீரியஸ் டிராக்கில் பயணித்திருக்கிறார். ஆனால் கதை வலுவாக இல்லாததால் இந்த பயணம் வெற்றிகரமாக முடியவில்லை. தியேட்டர்களில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத இப்படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...