சினிமாவில் உள்ள சக படைப்பாளிகளும் கூட இந்த ஜித்தனைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். எப்படி இந்த மனுஷனால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது. நம்மால் ஏன் முடியவில்லை என்று வாய்விட்டு கமெண்ட் அடித்தவர்களும் கூட இருக்கிறார்கள்.
American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer,
அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் [Christopher Nolan]. இவரது ‘ஒப்பன்ஹெய்மர்’ [Oppenheimer] படம். அணுக்குண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் பயோக்ராபிகல் படமான இது கே பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே ஷெர்வின் எழுதிய ’அமெரிக்கன் ப்ரோமெதஸ் : த ட்ரியம்ப் அண்ட் ட்ராஜெடி ஆஃப் ஜே ராபர்ட் ஒப்பன்ஹெய்மர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒட்டுமொத்த உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்தப்படம் இப்போது ஆஸ்கர் பந்தயத்தில் அசுரத்தனமான வேகம் எடுத்திருக்கிறது. வருகிற 96-வது அகாடெமி விருது விழாவில் இப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
- சிறந்தப்படம் – எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன்
- சிறந்த நடிகர் முன்னணி கதாபாத்திரம் – சிலியன் மர்ஃபி
- சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன்
- சிறந்த ஒளிப்பதிவாளர் – ஹோய்டே வான் ஹோய்டெமா
- சிறந்த ஒலிப்பதிவு – வில்லி பர்டன், ரிச்சர்ட் கிங், காரி ஏ ரிஸோ, கெவின் ஒ’கோனல்
- சிறந்த படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்
- சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் – ருத் டி ஜோங், க்ளெர் காஃப்மேன்
- சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – லுட்விக் கோரன்ஸன்
- சிறந்த நடிகை – துணை கதாபாத்திரம் – எமிலி ப்ளண்ட்
- சிறந்த நடிகர் – துணை கதாபாத்திரம் – ராபர்ட் டவுனி ஜூனியர்
- நாவலைத் தழுவிய சிறந்த திரைக்கதை – கிறிஸ்டோபர் நோலன்
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லூயிஸா எபெல்
- சிறந்த ஆடை அலங்காரம் – எலென் மிரோனிக்
இப்படி 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 10 மார்ச் 2024 அன்று அகாடமி விருதுகள் விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவை நான்காவது முறையாக காமெடியன் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்க இருக்கிறார்.