இந்திய பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்பே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. அந்த குறைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைவாக நிவாரணம் கிடைத்தது. இதனால் மாநில அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. மறுபுறம் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ள அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1,050 கோடி கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை முதலில் குறைக்க வேண்டும். 2014-ம் ஆண்டு இருந்த விகிதங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மாநில அரசுகளால் மேலும் வரிகுறைப்பு செய்ய இயலாது. அது மாநில அரசின் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல” என்று கூறியுள்ளார்.
டுவிட்டரை அடுத்து கோகோ கோலா, மெக்டொனால்ட்: எலான் மஸ்க் ட்விட்
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் உலகின் முன்னணி கோடீஸ்வரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்நிலையில், “கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன்” என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை தேர் விபத்து எதிரொலி: தேரோடும் வீதிகளில் இனி புதைவட மின்கம்பி – அமைச்சர் தகவல்
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்” என்று கூறினார். முன்னதாக, தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பேரவையில் அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் குவாட் உச்சி மாநாட்டில் மோடியை சந்திக்க ஜோ பைடன் திட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். அப்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “டோக்கியோவில் அதிபர் பைடன் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்காவின் குவாட் குழுவின் தலைவர்களையும் சந்திப்பார்” என்று கூறியுள்ளார்.