No menu items!

நியூஸ் அப்டேட்: அரசியலுக்கு வரமாட்டேன் – ரஜினிகாந்த் திட்டவட்டம்

நியூஸ் அப்டேட்: அரசியலுக்கு வரமாட்டேன் – ரஜினிகாந்த் திட்டவட்டம்

அர்சியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

“இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. அவரிடம் 30 நிமிடம் பேசினேன். அவர் வட மாநிலங்களில் இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழ் மக்களின் நேர்மை, கடுமையான உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. முக்கியமாக இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.”

அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டதா?

“ஆம், அரசியல் ரீதியாக பேசினோம்.”

மறுபடியும் அரசியலுக்கு வருவதற்கு திட்டம் இருக்கிறதா?

“இல்லை.”

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசப்பட்டதா?

“அதைப்பற்றி கூற முடியாது.”

ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

“15 அல்லது 22-ம் தேதி தொடங்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கய்யா நாயுடுவுக்கு பிரிவு உபச்சார விழா

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

இந்தியாவின்  துணை ஜனாதிபதியான வெங்கய்யா நாயுடு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவருக்கு இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கட்சிக்காரராக உங்களது கருத்தியல் அர்ப்பணிப்பு, எம்.எல்.ஏ.,வாக உங்கள் பணி, எம்.பி.,யாக உங்கள் செயல்பாடு என எதுவாக இருந்தாலும் சரி, அனைத்திலும் நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். நீங்கள் எந்த ஒரு வேலையையும் சுமையாகக் கருதாமல் புதிய வாழ்க்கையை சுவாசித்தீர்கள். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கப்பட்டது, விரும்பப்பட்டது, மதிக்கப்பட்டது, ஆனால் ஒருபோதும் எதிர்க்கப்படவில்லை” என்றார்.

காங்கிரஸ்  கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசும்போது, “கொள்கையில் நமக்குள் வேறுபாடுகள் இருந்துள்ளன. இதனால் உங்களுக்கு நாங்கள் சில மனக்கஷடத்தை கொடுத்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் அவையை சிறப்பாக கொண்டு செல்வதில் கவனமாக இருந்தவர். உங்களுக்கு நன்றி” என்றார்.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக எந்த வகையிலும் தமிழகத்திற்கு கனமழை முதல் அதீத கனமழையோ அல்லது ஏதேனும் ஆபத்தோ இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில்  இந்தியா வெற்றி பெற்றது.  இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான  ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.  ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக  64 ரன்களைக் குவித்தார். தீபக் ஹூடா 38 ரன்களும், ஹர்திக் 28 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி   தொடக்கம் முதலே   சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. 100 ரன்களில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக  4 விக்கெட்களை வீழ்த்தினார்.

தமிழகத்தில் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கண்ணன் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் உதவி கமண்டன்டாகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ் ராமநாதபுரம் பயிற்சி டி.எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் பணிபுரிந்து காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கபிலன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் நெல்லை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...