No menu items!

நியூஸ் அப்டேட்: எருமைமாடு சர்ச்சை – சீமானுக்கு  ஜெயக்குமார் கண்டனம்

நியூஸ் அப்டேட்: எருமைமாடு சர்ச்சை – சீமானுக்கு  ஜெயக்குமார் கண்டனம்

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கருப்பு திராவிடன் -பெருமைமிகு தமிழன்’ என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தை நேற்று பதிவிட்டிருந்தார். இது குறித்து கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘‘எருமை மாடும் கருப்பாக உள்ளது, அது திராவிடரா” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். “கருப்பாக இருப்பதால் திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும்” என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘‘தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்து இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல. இதில் உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளை கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம். அந்த வகையில் இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் அது சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம்: பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா, இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது.  இந்தியா ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது. பால் துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக சிறு விவசாயிகள் உள்ளனர். கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கோதுமை, அரசி விற்பனை கூட ரூ. 8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை” என்றார்.

குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக  இயற்கை எரிவாயு: தமிழக அரசு திட்டம்

தமிழ்நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் ரூ. 35 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் என தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இது தொடர்பாக, ‘மாநில அளவில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கான வரைவு கொள்கையை டிட்கோ தயாரித்துள்ளது. 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை, 22,794,795 வீடுகளுக்கு குழாயின் மூலம் வழங்குவதற்கான இத்திட்டம், ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இந்த பணி 8 ஆண்டுகளில் நிறைவடையும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பள்ளிகளை மூடி போராட்டம்: தனியார் பள்ளிகள் அறிவிப்பு

ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்கும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, “தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை 25 சதவிதம் குறைத்துள்ளனர். குறைவான கட்டணத்தை வைத்துக்கொண்டு பள்ளியை நடத்த முடியாது. யூகேஜி படிக்கும் மாணவனுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1000 என்றும் அதிகபட்சம் ரூ. 4,000 கட்டணம் வசூலிக்க தெரிவித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவனுக்கு ரூ.10,000 வாங்க சொல்கின்றனர். எப்படி பாடம் நடத்தி பள்ளிக்கூடத்தையும் இயக்க முடியும்” என்று தனியார் பள்ளி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது: குவியும் வாழ்த்துக்கள்

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானதை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் – கவுதம் கிச்சிலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...