No menu items!

நியூஸ் அப்டேட்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை

நியூஸ் அப்டேட்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்ட்டன.

இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் பள்ளிகளும் நாளைமுதல்  இயங்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் இன்று சில தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டன. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாளைமுதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை அளித்தார்.

சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானதுமுதல்வர் கருத்து

தமிழ்நாட்டுக்கு இப்பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் தேதி அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாடு நாள் விழாவில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ்நாடு நாள் விழாவில் நேரில் வந்து பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு என்ற பெயர் சாதாரணமாக கிடைத்ததல்ல. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது. திமுக அமைந்த காரணத்தால்தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட முடிந்தது. திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். சோகமான சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது. பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.

தூத்துக்குடியில் அச்சிட்ட பேப்பர்களில் உணவு பொருட்களை வழங்க தடை

அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள ‘கருப்பு மை’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டார். தூத்துக்குடியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சேசிய ஆட்சியர் செந்தில் ராஜ், “தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சென்னையில் ஜூலை 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வரும் 22-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை நடைபெற உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...