No menu items!

நியூஸ் அப்டேட்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்

நியூஸ் அப்டேட்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், கவர்னரை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ் குமார், ‘தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளேன். கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த முடிவு கட்சியின் முடிவு’ என கூறினார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. மெகா கூட்டணி மூலம் மீண்டும் புதிய ஆட்சியை நிதீஷ்குமார் அமைக்கவுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

இந்நிலையில், இறுதி நாளான இன்று ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார். தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்றனர்.

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் காலமானார்

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியபிறகு, முதன்முதலாக நடைபெற்ற திண்டுக்கல் தொகுதி இடைத் தேர்தலில் (1973) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர். வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாயத்தேவர்  (வயது 88) கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்தார். மறைந்த மாயத்தேவருக்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அப்போதுதான் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த அதிமுகவும் அந்தத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளராக மாயத்தேவரை அறிவித்தார். அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை நடிகை டாப்சி

தமிழில் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘டோபரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு டாப்ஸி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்சி, “அந்த நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை” எனக் கூறினார். டாப்சியின் இந்த பதில் பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சியில், பிரபலங்களிடம் அவர்களது பாலியல் வாழ்க்கை குறித்து கரண் ஜோகர் கேள்வி எழுப்புவது வழக்கம். அவரது கேள்வி பாலிவுட்டில் பலமுறை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...