No menu items!

நியூஸ் அப்டேட்: மின் இணைப்புடன் ஆதார் எண் – எதிர் மனு தள்ளுபடி

நியூஸ் அப்டேட்: மின் இணைப்புடன் ஆதார் எண் – எதிர் மனு தள்ளுபடி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய உயர் நீதிமன்றம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஈபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்குகள் ஏற்பு

அதிமுக சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி மற்றும் அக்டோபர் 3ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 2021- 2022ம் ஆண்டுக்கான அதிமுக வரவு, செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர தணிக்கை விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்து இதுவரை முடிவெடிக்காத நிலையில், வரவு, செலவு கணக்குகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

கடற்படை பயன்பாட்டுக்காக மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல், கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதுவிரைவில் கடற்படையில் சேர்க்கப்படவுள்ளது.

கடற்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே ஐஎன்எஸ் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய 4 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வகிர் கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...