No menu items!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று நிறைவு பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற தனது நடைப்பயணத்தை தொடங்கினார். 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார்.

அவரது இந்த நடைப்பயணம் ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இன்று நிறைவுபெற்றது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றினார்.

பின்னர் தன்னுடன் யாத்திரையில் பங்கேற்றவர்ளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி,” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி” என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒரு நாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். 61 டெஸ்ட் போட்டிகளில் 3,982 ரன்கள் அடித்துள்ளார்.

அவர் அனைத்து வித போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் முடிவை இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளை கண்டறியப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

அதிமுக தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் கோர்ட், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் ஜி20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...