No menu items!

நியூஸ் அப்டேட்: தேர் விபத்து – விசாரிக்க ஒரு நபர் குழு

நியூஸ் அப்டேட்: தேர் விபத்து – விசாரிக்க ஒரு நபர் குழு

தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று விவாதிக்கப்பட்டது. பின்னர் விவாதங்களுக்கு பதிலளித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி விசாரிக்க வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார். அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார்.


அயோத்யா மண்டபத்தை அறநிலையத் துறை எடுத்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம்

அயோத்யா மண்டபத்தின் நிர்வாகத்தை, இந்து சமைய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்து அறிவித்த நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், “அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவும், கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.


பெட்ரோல் விலை உயர்வு: மாநிலங்கள் மீது பிரதமர் குற்றச்சாட்டு

“தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல் – டீசல் விலை உயர்வு குறித்து பேசிய பிரதமர் மோடி, “கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்ததுபோல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. வாட் வரியை குறைக்காமல் மாநில மக்களை கூடுதல் சுமைக்கு ஆளாக்குகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது’’ என்றார்.


12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கென்றே உறுவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பேரறிவாளன் விவகாரம்: ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 1991-ல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என்று குறிப்பிட்டனர்.

மேலும், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மாநில அரசு ஒரு பரிந்துரையையோ, முடிவையோ ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அது பிடித்தால் கவர்னரே ஒப்புதல் தருவார், பிடிக்கவில்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்பிவிடுவாரா? பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருக்கிறது. அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில கவர்னர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. அமைச்சரவைக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல கவர்னருக்கு அதிகாரமில்லை.

விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது?” எனக் கூறியதுடன் அடுத்த ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


‘கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘விக்ரம் டிரெயிலர்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் டிரெயிலரை வெளியிட உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...