No menu items!

தனுஷ் படத்திற்கு புது சிக்கல்

தனுஷ் படத்திற்கு புது சிக்கல்

ரஜினி – கமல், விஜய் – அஜித் என இவர்களுக்குப் பிறகு வந்திருக்கும் அடுத்த தலைமுறை நடிகர்களில் கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தொடர்பவர் தனுஷ் மட்டும்தான் என்று சொல்லுமளவிற்கு இவருடன் போட்டிப் போடும் மற்ற நடிகர்களின் படங்கள் இருந்து வருகின்றன.

தமிழில் இருந்து தனது பட வியாபார சந்தையை விரிவுப்படுத்த நினைத்து இப்போது தெலுங்குப் பட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடித்துவருகிறார் தனுஷ். அந்தவகையில் முதல் படமாக ‘வாத்தி’ அமைந்தது. இப்போது அதேபோல் மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் படமான ‘குபேரா’வில் நடிக்க இருக்கிறார். இதை தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்திற்குதான் இப்போது சிக்கல் எழுந்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் ‘குபேரா’ என்ற பெயரில்தான் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் இப்போது ‘குபேரா’ என்ற பெயரை பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறதாம். விளம்பரம் கொடுத்து, ஊரெங்கும் குபேரா முதல் பார்வையை அறிமுகப்படுத்திய பிறகு இப்படி பிரச்சினையா என்று தனுஷ் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம்,

என்னதான் பிரச்சினை என்றால், ‘குபேரா’ என்ற பெயரை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தெலங்கானா சாம்பர் ஆஃப் காமர்ஸில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். ஆனால் ’தக்கன பிழைக்கும்’ என்பது போல், குபேரா என்ற பெயரை தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டார்கள். இது குறித்து அந்த தெலுங்கு தயாரிப்பாளர் முறையிட்ட போது, பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை.

இதனால் இப்போது அந்த தயாரிப்பாளர் தலைப்பு பிரச்சினைக்காக நீதிமன்றத்தை நாட இருக்கிறாராம். இதனால் தலைப்பு பிரச்சினை சூடுப்பிடிக்கவே, தனுஷ் என்ன பிரச்சினை இது என்று கேட்டிருக்கிறார். ‘குபேரா’ என்ற பெயரை பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என சுதாரித்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் இப்போது தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறதாம்.

தலைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. தலைப்பு விஷயத்தில் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் ரொம்ப குடைச்சல் கொடுத்தால், ‘தனுஷின் குபேரா’ என்று பெயரை மாற்றிவிடலாம் என்றும் ஒரு யோசனை இருக்கிறதாம்.


தேநீர்கடை தொழிலில் இறங்கிய சூர்யா பட நாயகி

பொதுவாகவே நடிகைகள் இரவுப்பகல் பாராமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், அவரது நெருங்கிய உறவினர்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே சாப்பிட்டு காலி செய்துவிடுவார்கள். நடிகைகள் தங்களது வருமானத்தில் வேறெந்த முதலீடு செய்திருக்க மாட்டார். இதனால் நடிகைக்கு பின்னாளில் பணப்பிரச்சினை உருவாகும். இதற்கு உதாரணம் பானுப்ரியா.

ஆனால் இன்றைக்குள்ள நடிகைகள் ரொம்பவே சாமர்த்தியசாலிகள். தங்களுக்கு பட வாய்ப்புகள் வரும்போதே சம்பாதிப்பதை வேறு எதிலாவது முதலீடு செய்து வருமானத்திற்கு வழியைப் பார்த்து விடுகிறார்கள்.

நயன்தாரா பெண்களுக்கான சரும பராமரிப்பு பொருட்கள், மாதவிடாய் சுற்றுக்கான நாப்கின்கள் தயாரிப்பில் இறங்கிவிட்டார். ஸ்நேகா ஜவுளி வியாபாரத்தில் களமிறங்கி இருக்கிறார். இவர்கள் வழியில் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தேநீர் கடையைத் தொடங்கியிருக்கிறார். இது கொஞ்சம் விலை அதிகம் இருக்கும் தேநீர் கடை. அதாவது ஒரு ரெஸ்டாரண்ட். ‘ஆரம்பம்’ என்ற பெயரில் இந்த ரெஸ்டாரண்ட்டை ஹைதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இந்த மாதிரி தொழில் முனைவோர் அனுபம் புதிதல்ல. இவர் ஏற்கனவே ஜிம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். எஃப்- 45 என்ற ஜிம் ப்ராண்டின் கிளை ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகிறார். ஷ்ரத்த ஸ்ரீநாத்தைப் போலவே, ரகுல் ப்ரீத் சிங்கும் சென்னையிலும் இவர் தேநீர் கடையைத் திறக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...