No menu items!

நெட்ஃப்ளிக்ஸ் பஞ்சாயத்து – அதிர்ச்சியில் இயக்குநர்கள்!

நெட்ஃப்ளிக்ஸ் பஞ்சாயத்து – அதிர்ச்சியில் இயக்குநர்கள்!

இந்தியாவில் ஒடிடி-தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற காரணம், இதுவரை பார்த்திராத கதை, திரைக்கதை, பிரம்மாண்டம், பல மொழி சினிமா, பல மொழி வெப் சிரீஸ் மட்டுமே காரணம் இல்லை.

பொதுவாகவே ஒடிடி-யில் ஸ்ட்ரிமிங் ஆகும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், வெப் சிரீஸ்களுக்கு தணிக்கை பஞ்சாயத்து எதுவும் இருந்தது இல்லை. இதனால் இந்த தணிக்கை செய்யாத, அட்-கட் என்றழைக்கப்படும் திரைப்படங்களை, வெப் சிரீஸ்களை பார்க்கவே ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது.

இந்த மாதிரியான அட்-கட் ஸ்ட்ரிமிங்கில் ஏராளமான சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றிய வசனங்கள், காட்சிகள் இடம்பெற்று இருக்கும். கவர்ச்சியைத் தாண்டி காமம் பீறிடும் காட்சிகள் கலவரப்படுத்தும். அரசியல் நையாண்டிகள் இடம்பெறும். இதனால் இதுவரை தணிக்கை செய்யப்பட்ட, ஒரே மாதிரியான பரப்புரை உடைய நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒடிடி-தளங்கள் ஒரு பெரும் மாற்றாக இருந்தன.

படைப்பாளிகள் சுதந்திரம் என்று கட் எதுவுமில்லாமல் வெளியான படங்களுக்கு இங்கு வெளியான படங்கள், அட்- கட் முறையில் வெளியாகி வந்தன. இதனால் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம் இருந்தது.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் ஒடிடி-தளங்களுக்கும் தணிக்கை வந்துவிடும் என்ற முணுமுணுப்பு இருந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் முன்னே இப்போதே அதற்கான வேலைகளை நெட்ஃப்ளிக்ஸ் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.

இனி சென்சார் செய்யப்பட்ட படங்களையே ஸ்ட்ரிமிங் செய்ய வேண்டுமென மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.

இதனால் நெட்ஃப்ளிக்ஸ் சென்சார் செய்யப்படாத இந்தியப் படங்களை ஸ்ட்ரிமிங் செய்யாது. இந்த மாதிரியான படங்களில் பெரும்பான்மையானவை ஏ சர்டிபிகேட் வாங்கியவை அல்லது அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன.

இந்த சென்சார் பிரச்சினை ’Bheed’ என்னும் படத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதில் பிரதமர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஆகியோரின் வாய்ஸ்-ஓவர் சில அரசியல் பின்னணி காட்சிகளுடன் இடம்பெற்று இருந்தது. சென்சார் போர்ட், நெட்ஃப்ளிக்ஸூக்கு சொன்ன பிறகு அந்த காட்சிகளை எடிட் செய்து நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரிமிங் செய்கிறது.

இனி இது போலவேதான் மற்றப்படங்களையும் நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரிமிங் செய்யும் என்று ஒடிடி-வட்டாரத்தில் பேச்சு ஆரம்பித்திருக்கிறது.

தமிழில் வெளியான விஜய் நடித்த ‘லியோ’, வெளிநாடுகளில் அட்-கட் ஆக வெளியிடப்பட்டது. ஆனால் ஒடிடி-யில் சென்சார் செய்யப்பட்டதே ஸ்ட்ரிமிங் ஆகி வருகிறது.

இதேபோல் ‘OMG 2’ என்ற ஹிந்திப்படத்திற்கும் இதே பிரச்சினைதான். இந்தப் படத்தில் செக்ஸ் கல்வி குறித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதில் பெரும்பாலான காட்சிகளையும் இப்போது ஸ்ட்ரிமிங் செய்யவில்லை.

தமிழில் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியான ’ஜப்பான்’ படத்தில் அம்பானி, அதானி பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இப்போது இந்த பெயர்கள் இல்லாமல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரிமிங் செய்யப்படுகிறது.
சமீபகாலமாக சிகரெட், மது குறித்த எச்சரிக்கை வாசகங்களும் சில காட்சிகளில் இப்போது நெட்ஃப்ளிக்ஸில் இடம்பெற்று வருகின்றன.

இதையெல்லாம் வைத்து பார்த்தால், இனி படைப்பாளிகளின் டைரக்டர் கட் இனி நெட்ஃப்ளிக்ஸில் இடம்பெறாது என்றே தெரிகிறது. இது படைப்பாளிகளை மட்டுமில்லாமல், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...