No menu items!

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது.

தற்போது சுற்றுப்பாதை உயரத்தை சுருக்கி, நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

23-ம் தேதி  மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில் இன்று லேண்டர் எடுத்த சில புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  இந்தப் புகைப்படங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எடுக்கப்பட்டவையாகும். தற்போது நிலவில் இருந்து 25 km x 134 km குறைக்கப்பட்ட தூரத்தில் சந்திரயான் 3 உலவி வருகிறது


நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

 நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் அமையவுள்ள  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 நெம்மேலியில் ரூ.4,276 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 கோடி லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமான இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று   அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்களுக்கும் சென்னையின் தென் மேற்கு பகுதியில் உள்ள 35 பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வழங்க முடியும்.


தெலங்கானா தேர்தல் – 2 தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டி

தெலங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, 119 தொகுதிகளுக்கும் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன.

 இந்த நிலையில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், கஜ்வெல் மற்றும் கம்மா ரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.


ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 30-ம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது.

இப்போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக ஹர்த்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  காயத்தால் கடந்த சில மாதங்களாக ஆடாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். திலக் வர்மா முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி வருமாறு:

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

இந்த வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ரிசர்வ் வீரராக   சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...