No menu items!

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்!

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்!

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மலையாள சினிமாவின் ’கம்ப்ளீட் ஆக்டர்’ மோகன்லால் இணைந்து நடித்திருக்கிறார்.

ஆனால் இதே மோகன்லால், ரஜினியின் மற்றொரு படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். இந்த விஷயம் இப்பொழுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அந்தப்படம், ரஜினியின் சினிமா பயணத்தில் அவரை சரளமாக நூறு கோடிக்கும் அதிகமான பட்ஜெட் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க கட்டாயப்படுத்திய ‘சிவாஜி’.படம்தான்.

‘சிவாஜி’ திரைக்கதை முழுமையான பிறகு, ரஜினிக்கு வில்லனாக நடிக்க, மோகன்லாலை அணுகியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ஷங்கரை உற்சாகமாக வரவேற்ற மோகன்லால், பொறுமையாக ‘சிவாஜி’ கதையைக் கேட்டிருக்கிறார். ’சிவாஜி கதையைக் கேட்டப்பிறகுதான் ஷங்கர் எனக்காக சொன்ன கதாபாத்திரம் நெகட்டிவான வில்லன் கதாபாத்திரம்னு புரிஞ்சது. சுவாரஸ்யமான கதாபாத்திரம்தான். ஆனால் கால்ஷீட் விஷயத்துல செட்டாகல. அப்ப கொஞ்சம், இப்ப கொஞ்சம்னு ஒரு வருஷம் முழுக்க கால்ஷீட் தேவைப்பட்டுச்சு. அப்போ நான் நடிச்சிட்டு இருந்த மலையாளப்படங்களை விட்டுட்டு வர விரும்பல். கேரளா, தமிழ்நாடுன்னும் இங்குள்ள சினிமாவில் எனக்கு நல்ல உறவு இருக்கு. அதை விட்டுக்கொடுக்க மனசு வரல. அதனால ’சிவாஜி’ படத்துல அந்த கேரக்டர்ல நான் நடிக்க முடியாம போச்சு’ என்று மனம் திறந்திருக்கிறார் மோகன்லால்.

மோகன்லால் நடிக்க மறுத்த அந்த கதாபாத்திரத்தில்தான் சுமன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பந்தா காட்டிய விக்ரம்? அதிர்ச்சியான அனுராக் காஷ்யப்!

சமீபத்தில் ஊடகங்களில் அதிகம் அடிப்பட்ட விழா ‘கான்ஸ் ஃப்லிம் ஃபெஸ்டிவல்’. இதற்கு ஒரே காரணம் தான். அதில் திரையிடப்படும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அப்பட விழாவிற்கு வருகைத்தரும் நட்சத்திரங்கள் ரெட் கார்பெட்டில் போட்டோகளுக்கு போஸ் கொடுப்பதற்கென்றே அணிந்து வரும் உடைகளும், அவர்களது கவர்ச்சியும்தான்.

இந்த வருட கான்ஸ் திரைப்படவிழாவில் பாலிவுட்டின் தாறுமாறான இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் ‘கென்னடி’ படத்தின் டீசர் திரையிடப்பட்டது.

இந்த ‘கென்னடி’ படத்தில் நடிக்க விக்ரமை அழைத்த அனுராக் காஷ்யப்பின் போன் அழைப்பை கண்டுக்கொள்ளாமல் அவமதித்து இருக்கிறார் என்ற புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அனுராக் காஷ்யப் ‘கென்னடி’ படத்தின் கதையை, விக்ரமை மனதில் வைத்தே எழுதியிருக்கிறார். கதை எழுதும் வேலைகள் முடிந்ததும், விக்ரமை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் விக்ரமிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஹிந்தி திரைப்பட ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள். எதற்கு நீங்கள் இறங்கிப் போய் ஒரு தென்னிந்திய நடிகரிடம் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். என கோபப்பட்டிருக்கிறார்கள். விக்ரம் நடித்த ‘அந்நியன்’, ‘கோப்ரா’, ‘மகான்’ என எல்லா படங்களுமே ஒரே மாதிரியான வகையறா படங்களாகதானே இருக்கின்றன என கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

இப்படி பிரச்சினை பூதாகரமாக ஆவதை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்ட விக்ரம், பரபரவென அனுராக் காஷ்யப்பிற்கு பதிலளித்து இருக்கிறார்.

டியர் அனுராக் காஷ்யப். சோஷியல் மீடியாவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் பொருட்டு, இப்பொழுதுதான் கடந்த ஒரு வருடமாக நாம் பேசிக்கொண்டிருந்த உரையாடல்களை திரும்பி பார்த்தேன். இந்தப் பட த்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்பதை நான் மற்றொரு நடிகர் மூலமாக அறிந்தேன். நான் உங்களுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். அதனால்தான் நான் உங்களை உடனடியாக அழைத்தேன். நீங்கள் என்னை தொடர்பு கொள்ள அழைத்த இ-மெயிலில் உங்களுடைய மெயிலோ அல்லது மெஸேஜ்ஜோ எதுவும் இல்லை. அந்த மெயில் இப்பொழுது ஆக்ட்டிவ்வாக இல்லை. அதே போல் என்னுடைய மொபைல் நம்பரையும் 2 வருடங்களுக்கு முன்பே மாற்றிவிட்டேன். உங்களிடம் போனில் பேசும் போது சொன்னதுதான், உங்களுடைய ‘கென்னடி’ படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். அது மட்டுமில்லாமல் உங்கள் படப்பெயரும் என் பெயரும் ஒன்றுதான்.’’ என்று ஒரு நீண்ட பதிலை அளித்திருக்கிறார் விக்ரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...