No menu items!

தனுஷூக்கு நோ சொன்ன மஞ்சுமேல் பாய்ஸ் இயக்குநர்

தனுஷூக்கு நோ சொன்ன மஞ்சுமேல் பாய்ஸ் இயக்குநர்

கேரளாவின் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்திற்கு தமிழ் நாட்டில் எக்கச்சக்க வரவேற்பு.

தமிழ்ப் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்குவது போல் இப்போது மஞ்சுமேல் பாய்ஸ் படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்கியிருக்கிறார்கள். திரையரங்குகளும் முழுமையாக நிரம்பும் அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள்.

இதனால் இப்பட த்தின் வசூல் இப்போது 160 கோடியைத் தாண்டி போய் கொண்டிருக்கிறது. இன்னும் 20 கோடி வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இப்பட இயக்குநர் சிதம்பரம், படத்தை இங்கே பெரியளவில் கொண்டு சேர்க்க விரும்பி எல்லா முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின் போது சிதம்பரம் தனுஷையும் சந்தித்தார்.

சிதம்பரத்தைப் பாராட்டிய தனுஷ், அவரிடம் நேரடியாகவே ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது ‘உங்களிடம் எனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா’ என்ற கேள்விதான்.

கொஞ்சம் கூட யோசிக்காமல், ’இல்லை’ என்று ஒரே வார்த்தையில் மறுத்திருக்கிறார்.

’சரி பரவாயில்லை, எனக்காக ஒரு கதை யோசியுங்கள், எழுதுங்கள். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்’ என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

அப்போதும் கூட ‘அது முடியாது சார்’ என்றாராம் சிதம்பரம்.
‘ஏன்’ என்று கொஞ்சம் அதிர்ச்சியில்தான் கேட்டிருக்கிறார் தனுஷ்.

‘முதலில் நான் இங்குள்ள, தமிழ்நாட்டு கலாச்சாரம், ட்ரெண்ட் எல்லாவற்றையும் முழுதாகப் புரிந்து கொண்டால்தான், அதை வைத்து கதை எழுத முடியும்.’ என்று கூறிவிட்டாராம்.

இதனால் தனுஷூக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லையாம்.


விஜயைத் துரத்தும் த்ரிஷா சென்டிமெண்ட்

விஜய் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த ‘கில்லி’, அப்படம் வெளிவந்த நேரத்தில் அதிரிபுதிரி ஹிட். இப்பொழுதும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் ஒன்று அது.

அடுத்து ’திருப்பாச்சி’யில் இதே ஜோடி நடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ படத்தில் விஜயும் த்ரிஷாவும் இணைந்து நடித்தனர்.

‘லியோ’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படம் மூலம் அதிக விளம்பரம், பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தவர் லோகேஷ் கனகராஜ்ஜூவோ அல்லது விஜயோ அல்ல. த்ரிஷாவுக்குதான் பெரும் பஞ்சாயத்து ஆகிப் போனது.

விஜய் – த்ரிஷா நடித்தப் படங்கள் ஏதாவது ஒரு வகையில், கவனத்தை ஈர்த்ததால், விஜய் – த்ரிஷா சென்டிமெண்ட் மீண்டும் எடுப்படும் என கோட் யூனிட் நினைக்கிறதாம். இந்த முறை வெங்கட் பிரபுவும் த்ரிஷாவை ‘த கோட்’ படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறாராம்.

விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி ஒப்பந்தமாகிவிட்டார். இவர் விஜயுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளையும் ஷூட் செய்து விட்டார்கள். இதனால் த்ரிஷாவை சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

இப்பட த்தில் ஏற்கனவே மீனாட்சி செளத்ரி, ஜெயராம், ஸ்நேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், மைக் மோகன், வைபவ், ப்ரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து கொண்டிருக்கிறது. இப்போது இதில் த்ரிஷாவும் சேர்ந்திருக்கிறார்,

த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருக்குமாறு இயக்குநர் வெங்கட் பிரபுவின் உத்தரவாம். ஆனா, த்ரிஷாவுக்கு ஒரு பாடலும் இருக்கிறது என்று ஒரு கிசுகிசு அடிப்படுகிறது.

’த கோட்’ படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்கள் என்பதால் இப்படம் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினி மேன்’ படத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது என்ற பேச்சு ஏற்கனவே அடிப்படுகிறது,. ஆனால் இந்தப் படம் ரீமேக் அல்ல என வெங்கட் பிரபு கூறியிருந்தாலும், இதன் முதல் டிஜிட்டல் போஸ்டரை பார்த்த சினிமா ப்ரியர்கள் ‘ஜெமினி மேன்’ மாதிரியே டிசைன் இருக்கிறது என்று கமெண்ட் அடித்தப்படி இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...