No menu items!

ரஜினி, விஜய் படங்களின் நிலை இதுதான்! Latest Update

ரஜினி, விஜய் படங்களின் நிலை இதுதான்! Latest Update

2024-ல் வெளியாக இருக்கும் படங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, விஜயின் ’க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, ரஜினியின் ’வேட்டையன்’ படங்களின் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

ரஜினி காவல்துறை அதிகாரியாக, தனது வயதுடைய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘வேட்டையன்’. இதை ’ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். நான்கைந்து ஷெட்யூல்களாக நடைபெற்ற ஷூட்டிங் ஒரு வழியாக முடிவடைந்து இருக்கிறது. குறிப்பாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன.

இதனால் இனி ஏதாவது பேட்ச் வொர்க் இருந்தால் மட்டுமே ஷூட்டிங் இருக்குமாம். ரஜினி காட்சிகள் மட்டுமே மீதமிருந்தது. அவையும் எடுக்கப்பட்டுவிட்டதால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன.

விஜயின் ’கோட்’ ஷூட்டிங்கும் ஏறத்தாழ முடிந்துவிட்டது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரஷ்யாவில் எடுத்தார்கள். பிறகு அங்கிருந்து இந்தியா திரும்பிய விஜய் தேர்தலுக்கு ஓட்டு போட்டார். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே சென்னையில் இறுதிகட்ட சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

பரபரவென ஷூட்டிங்கை வெங்கட் பிரபு முடித்துவிட்டதால், இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக விஜயின் வயதைக் குறைத்து இளமையான விஜய் ஆக காட்டும் டி- ஏஜிங் சமாச்சாரங்களுக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டனவாம். அதேநேரம் ஒரு சில அவசியமான பேட்ச் வொர்க் ஷூட்டிங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

’கோட்’ படத்தில் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இருக்கும் என உத்திரவாதம் அளிக்கிறது அப்படக்குழு. விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் இருக்கின்றனவாம். இதில்தான் விஷூவல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடி இருக்கிறார்களாம். இந்த காட்சிகளுக்கான பட்ஜெட் மட்டுமே சில கோடிகள் பிடித்திருக்கிறது என்கிறார்கள்.

‘விடாமுயற்சி’ ஷூட்டிங் குறித்த காலத்தில் மீண்டும் தொடங்காமல் இருக்கிறது. இதற்கு லொகேஷ் பிரச்சினை, அங்கு நிலவும் காலநிலை மாற்றங்கள் என்று ஒரு காரணத்தை சொன்னாலும்,, லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிதி நெருக்கடியில் இருப்பதும் ஒரு காரணம் என்று முணுமுணுக்கிறார்கள்.
லைகா சொன்ன படி வாக்கு கொடுத்த சம்பள தவணையைக் கொடுக்கவில்லை அதனால்தான் அஜித் ஷூட்டிங்கிற்கு வருகிறேன் என்று சொல்லவில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறது.

’விடாமுயற்சி’யின் அடுத்த ஷெட்யூலுக்கு கிளம்ப வேண்டிய அஜிட், இந்த பிரச்சினைகளால் இப்போது ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஷெட்யூலில், இரண்டு நாட்கள் மட்டும் அஜித் நடித்திருக்கிறாராம். இங்கு முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட இருப்பதால், ஒரு பெரிய செட்டும் போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது ஷெட்யூல் ஹைதராபாத்திலா அல்லது வேறு எங்கேயாவதா என்பதை இன்னும் சில நாட்களில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

அடுத்து கோலிவுட்டில் லேட்டஸ்ட் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தை ‘லவ் டுடே’ படமெடுத்த அதே ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜையை போட்ட கையோடு, ஷூட்டிங்கையும் வைத்துவிட்டார்கள். அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...