No menu items!

அன்புத் தம்பி உதயநிதி … ரஜினி, கமல் வாழ்த்து

அன்புத் தம்பி உதயநிதி … ரஜினி, கமல் வாழ்த்து

புதிதாய் அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.

அத்தை கனிமொழி கருணாநிதி, ‘இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு.@Udhaystalin அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.’ என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்துக் கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் கனிமொழி வீட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்று அங்கு ராஜாத்தி அம்மாளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புத் தம்பி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது வாழ்த்தில் ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உலக நாயகன் கமல்ஹாசனும் உதயநிதியை தம்பி என்றே அழைத்திருக்கிறார். அவருடைய வாழ்த்தில் ‘வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்த்தில்

‘உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்’

என்று கவிதை நடையில் வாழ்த்தியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் வாழ்த்தியிருக்கிறார். அன்பு இளவல் என்று வாழ்த்தில் குறிப்பிட்டிருக்கிறார். ’தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்கும் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளர் அன்பு இளவல் @Udhaystalin அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜகவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட காயத்திரி ரகுராமும் உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். பதவியேற்கும் வீடியோவை பதிவிட்டு காங்கிராஜூலேஷன்ஸ் என்று கூறியிருக்கிறார்.

பதவியேற்புக்கு முன்பு உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...