No menu items!

தடைகளைக் கடந்து எம்ஜிஆரை மணந்த வி.என்.ஜானகி

தடைகளைக் கடந்து எம்ஜிஆரை மணந்த வி.என்.ஜானகி

நாட்டியத் தாரகை, முன்னணி நடிகை, உச்ச நட்சத்திர நடிகரின் மனைவி, தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என பல பெருமைகளைக் கொண்டவர் வி.என்.ஜானகி.

திருவாங்கூர் சமஸ்தானம் வைக்கம் என்ற ஊரில் 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நாராயாணி பாபநாசம் ராஜகோபாலய்யரின் மகளாக ஜானகி பிறந்தார். சிறு வயதிலேயே பாபநாசம் ராஜப்பாவிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். படிப்பில் முதல் மாணவியாக விளங்கினார். கும்பகோணம் பாணாதுரை உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்தார்.

இந்த சூழலில் தமிழ் ஆசிரியரான ராஜகோபால், சினிமாவில் பாடல் எழுதும் ஆசையுடன் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். அப்பாவுடன் சென்னைக்கு வந்த ஜானகிக்கு சினிமா பார்ப்பதிலும், சினிமாவில் நடிப்பதிலும் ஆசை அதிகம். ஜானகியின் 13-வது வயதில் அவருக்கு, ‘இன்ப சாகரன்’ என்ற பட்த்தில் நடிக்க வாய்ப்பு வந்த்து. ஆனால் அந்த படம் நிறைவடைந்த நிலையில் பிலிம்கள் தீக்கிரையானது.

அந்த காலப் படங்களில் தனியாக நாட்டியக் காட்சிகள் இடம்பெறும். வி.என்.ஜானகி கிருஷ்ணன் தூது, சக்குபாய், சகுந்தலா, சாவித்திரி, சூரிய புத்திரி, பக்தி மாலா, கச்ச தேவயானி.ஆகிய படங்களில் நாட்டியமாடினார்.

இதைப்பற்றி ஒரு பேட்டியில் சொன்ன வி.என்.ஜானகி, “ நடனமாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். என்னை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது டைரக்டர் கே.சுப்பிரமணியம்தான். அவருடைய நடன கலா சேவாவின் மாணவிகளில் நானும் ஒருத்தி. எல்லாவித நாட்டியங்களிலும் நான் அங்கு தேர்ச்சி பெற்றேன்” என்கிறார்.
வி.என்.ஜானகி நடித்து பெயர் பெற்ற படங்கள் ஆனந்த சயனம், தேவ கன்யா, ராஜ பத்ருகாரி, மான சம்ரட்சணம், சகட யோகம், பங்கஜவல்லி, சித்ரபகாவலி, தியாகி, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, , நாம் ஆகியவை.

அந்நாளைய சிரிப்பு நடிகர் கணபதி பட் என்பவரிடம் நடனம் கற்றுக் கொண்ட ஜானகி. பின்னர் அவரையே மணந்துகொண்டார். 2 குழந்தைகளுக்கு தாயான பின் அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தாய் மாமா அவருக்கு கார்டியனாக இருந்தார். இந்த நிலையில். எம்ஜிஆருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ராஜமூக்தி படப்பிடிப்பில்தான் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இது தியாகராஜ பாகவதரின் சொந்தப் படம். அதில் பாகவதருக்கு ஜோடியாக ஜானகி நடித்தார். அந்தப் படத்திற்கு அவர் பெற்ற சம்பளம் 20,000 ரூபாய். அதே படத்தில் சேனாதிபதியாக நடித்த எம்ஜிஆரின் சம்பளமோ 1,500 ரூபாய்.

1949-ல் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்ஜிஆர் நாயகனாகவும், ஜானகி நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மருதநாட்டு இளவரசி வளர வளர அவர்களின் காதலும் வளர ஆரம்பித்த்து. அவர்களின் காதலுக்கு ஜானகியின் கார்டியன் பெரும் தடையாக இருந்தார். ஆனால் தடைகளை உடைத்து ஜானகியின் கரத்தைப் பற்றினார் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் 38 ஆண்டுகள் அன்பான தம்பதிகளாக வாழ்ந்தனர் 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் தமிழக முதல்வராக ஜானகி பொறுப்பேற்றார். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமை பெற்றார்.

எம்ஜிஆரின் சிறந்த துணைவியாக மனைவியாக வாழ்ந்து1996 ல். இயற்கை எய்தினார் திருமதி ஜானகி எம் ஜி ஆர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...