No menu items!

முத்தம், ரத்தம், பசி, போராட்டம் – அதிரடிக்கும் ஹீராமண்டி

முத்தம், ரத்தம், பசி, போராட்டம் – அதிரடிக்கும் ஹீராமண்டி

சமீபத்தில் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஹீராமண்டி இணையத்தொடர் பல்வேறு வகையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டின் மெகா இயக்குனரான சஞ்சய் லீலா பஞ்சாலி தனது ஒவ்வொரு படத்தைம் முத்திரை பதிக்கும் படைப்பாக கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு வெளியான கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தில் ஆலியாபட்டை முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருக்கிறார். மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த பெண் தாதா கங்குபாய் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதில் ஆலியாவின் நடிப்பை பலரும் சிலாகித்துப் பாராட்டினார்கள். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தாலும் படத்தின் கலை அம்சம் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இந்தப்படத்தின் மூலம் ஆலியாவுக்கு பாலிவுட்டின் பெரிய மரியாதை கிடைத்தது. அதோடு இளம் வயதில் அவரது நடிப்பு மிரள வைத்தது. பாலிவுட்டின் பல முன்னணி இயக்குனர்களும் ஆலியாவை புகழ்ந்து தள்ளினார்கள் இப்படி ஒரே படத்தின் மூலம் ஒரு நடிகையின் திரையுலக வாழ்க்கையை புரட்டி போட வைத்தார் சஞ்சய் லீலா பஞ்சாலி.

தற்போது வெளியாகியிருக்கும் ஹீராமண்டி இணையத்தொடர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இதன் கதை சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நடப்பதாக இருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்து போராடும் ஹீராமண்டி சமூகத்தினரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் சஞ்சய் லீலா பஞ்சாலி.. இதிலும் பெண்களை மையப்படுத்தி கதை இருப்பதால் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதோடு முன்னணி நடிகைகளை நடிக்க வைத்திருப்பது , தொடரின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. . மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சந்தா, சஞ்சிதா ஷீஹா என்று நடிகைகள் கூட்டத்தையே நடிக்க வைத்திருக்கிறார்.

தொடர் வெளியாகியிருக்கும் நிலையில் படத்தில் நடித்த நடிகைகள் தங்கள் அனுபவங்களைக் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஷர்மின் ஷேகலின் பணிப்பெண் சைமாவாக நடித்த ஸ்ருதி ஷர்மா அவரது காதலராக நடித்த ரஜத் என்பவருடன் நெருக்கமானகாதல் காட்சியில் நடித்திருக்கிறார். இது ஒரு நாள் முழுவதும் எடுக்கப்பட்டிருக்கிறது. காட்சிப்படி குறைந்த உடைகளோடு வைக்கோல் நிறைந்த இடத்தில் எடுக்கப்பட்டதால் உடல் முழுவதும் தடுப்பு தடுப்பாக ஏற்பட்டு வீங்கி விட்டதாக கூறியிருக்கிறார். அந்த வலியோடு இருவரும் உருண்டு உருண்டு காதலிக்கும் காட்சியும் எடுக்கப்பட்டதாம் இப்படி படத்தில் பணியாற்றிய பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதை மனிஷா கொய்ராலா உட்பட பலரும் பகிர்ந்து வருவது படத்தை விட சுவராஸ்யமாக இருக்கிறது. சோனாக்‌ஷி சின்ஹா ஓரின சேர்க்கையில் ஈடுபடும் காட்சி தொடரில் பரபரப்பாக இருக்கிறது.

இந்தியில் திரைப்படச் சூழல் இப்படியிருக்க, தமிழில் இது போன்ற முயற்சிகளில் எந்த தயாரிப்பாளரும் இயக்குனர்களும் இறங்கவில்லை என்ற பேச்சு எழுந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...