No menu items!

69 வயதில் உச்சம் தொடும் கமல்

69 வயதில் உச்சம் தொடும் கமல்

தமிழ் சினிமாவி60ல் ரஜினி காந்த் – கமல் ஹாசன் என்ற போட்டியில் லேட்டாக வந்து லேட்டஸ்ட்டாக வென்றவர் ரஜினிகாந்த். கமல் பல மணி நேர மேக்கப், உடலை வருத்தி நடிப்பது, வித்தியாசமான முயற்சிகள் என்று நடித்தாலும், ஒரு கமர்ஷியல் கதை, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஸ்டைல் என நடித்து வசூலையும், பெயரையும் தட்டிச்சென்றவர் ரஜினி.

இன்றைய நிலவரப்படி ரஜினிக்கு கிடைத்திருக்கும் இடம் உச்சம். ரஜினிக்கு அடுத்து விஜய், அஜித் என பட்டியல் மாறியிருக்கிறது. இதனால் கமல் பி’க் பாஸ் கமல்’ ஆகவே இருந்து வந்தார்.

இப்படி இருந்த கமலின் நிலைமை இப்போது தலைக்கீழ். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சில் மட்டும் கருத்து பேசிக்கொண்டிருந்த கமலுக்கு ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி. இதையடுத்து இவர் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் உடன் இணையும் ‘தக் லைஃப்’ படம். ஷங்கருடன் மீண்டும் இணைந்து ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ என அடுத்தடுத்து கைவசம் முக்கியப் படங்களை வைத்திருக்கிறார்.

விக்ரம் படத்தின் வெற்றி கமலின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையிலும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இதுதான் இப்போது மணிரத்னமையும், கமலையும் யோசிக்க வைத்திருக்கிறது. நம் இருவர் கூட்டணிக்கு இருக்கும் மவுசை, எதிர்பார்ப்பை ஏன் வீணடிக்க வேண்டும். நாம் இணைந்து ஏன் சீக்வல் எடுக்க கூடாது என்று யோசித்திருக்கிறார்கள். இதன் விளைவாக மணிரத்னம் சொன்ன திட்டம்தான் ‘தக் லைஃப்’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவது.

இதற்குதான் காத்திருந்தேன் என்பது போல், கமலும் உடனடியாக சம்மதம் தெரிவித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியானது. முதல் பாகம் வெளியாகி 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் தக் லைஃப் இரண்டு பாங்கங்கள் அப்படி திட்டமிடப்படவில்லையாம். முதல் பாகம் வெளியானதும், சில நாட்கள் கழித்து இரண்டாம் பாகத்திற்க்கான ஷூட்டிங் தொடங்கமாம்.

அதாவது முதல் பாகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இரண்டாம் பாகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஷங்கர், மணிரத்னமுடன் அடுத்தடுத்து இரண்டுப் படங்களை கைவசம் வைத்திருக்கும் கமல், தமிழ் சினிமாவின் வியாபாரம் மற்றும் வசூலில் ரஜினியைப் பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக தமிழ் சினிமாவில் பேசி கொள்கிறார்கள்.


மீண்டும் காதலில் சிம்பு.

தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்புவதில் இளைய தலைமுறை நடிகர்களில் சிம்புவுக்கும் தனுஷூக்கு இடையேதான் கடும் போட்டி. இவர்கள் இருவரும் காதல், திருமணம், திருமண முறிவு தொடர்பான கிசுகிசுக்களில் அதிகம் அடிப்படும் நடிகர்கள்.

தனுஷ் திருமணம் செய்து விவாகரத்து வாங்கிவிட்டார். மறுபக்கம் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி என இருவருடன் காதல் வயப்பட்டு, அந்த இரண்டு காதலும் முறிந்து சிங்கிள் சிம்புவாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு மீண்டும் காதல்வயப்பட்டு இருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள். இடையில் நிகழ்ச்சியொன்றின் போது, லட்சுமி மேனனுடன் சிம்பு நெருக்கமாக இருப்பது காணொலி வெளியானது. ஆனால் அது குறித்து சிம்புவும், லட்சுமி மேனனும் வாயைத் திறக்கவே இல்லை. கொஞ்சநாட்களில் அடுத்தடுத்து பஞ்சாயத்துகள் வர இதை மக்கள் மறந்துவிட்டார்கள்.

இப்படி காதலில் இழுத்து கொண்டே இருக்கும் சிம்புவுக்கு, கல்யாணம் பண்ணி பார்க்க அவரது அம்மா உஷா பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. வேண்டாத கடவுள்கள் இல்லை.

உஷாவின் வேண்டுதல்களுக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது என்று சிம்புவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் கிசுகிசுப்படுகிறது.

சிம்பு பிரபல தெலுங்கு நடிகரின் வாரிசை விரும்புவதாகவும், அந்த வாரிசுக்கும் சிம்பு மேல் ஒரு அன்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். யார் அந்த தெலுங்கு நடிகர் என்று கேட்டால், அவர் அசத்தலாக நடிப்பார், அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவார் என்று சொல்கிறார்கள்.

அநேகமாக சிம்புவின் திருமணம் சீக்கிரமே உறுதியாகிவிடும் எனவும் சிம்புவுக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள். .


சூர்யாவுடன் நடிக்க பூஜா ஹெக்டே கேட்ட சம்பளம்

விஜயுடன் ஜோடியாக நடித்தால், கதாநாயகிகளுக்கு கடும் பஞ்சம் நிலவும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஆகிவிடலாம் என்று கனவோடு அரபிக்குத்துடன் களமிறங்கினார் பூஜா ஹெக்டே.

ஆனால் விஜய், நெல்சன், பூஜா ஹெக்டே என இந்த மூவரில் யாருக்கு நேரம் சரியில்லாமல் போனதோ தெரியவில்லை. பீஸ்ட் படம் பீஸ் பீஸ்ஸாக விமர்சிக்கப்பட்டது. இதனால் பூஜாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

ஆனால் அவரை தனது பையா 2 -வில் நடிக்க வைக்கலாம் என இயக்குநர் லிங்குசாமி ஆரம்பத்தில் கேட்டிருக்கிறார். 4 கோடி கொடுத்தால் பார்க்கலாம் என்று பூஜா கறாராக சொல்லியிருக்கிறார். பிறகு பையா2 குறித்த குழப்பம் இருந்ததால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தெலுங்கில் உச்சத்தில் இருந்த பூஜா ஹெக்டேவுக்கு அங்கேயும் இப்போது படங்கள் இல்லை. தமிழிலும் படங்கள் இல்லை. ஆனாலும் பூஜா சம்பளத்தைக் குறைக்க ஒப்புகொள்ளவில்லையாம்.

நான்கு கோடி கொடுங்கள். நடிக்கிறேன். இப்படிதான் பேச்சை ஆரம்பித்தாராம் பூஜா ஹெக்டே. சூர்யா ஒகே சொன்ன பிறகே பூஜா ஹெக்டேவுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

பூஜாவுக்கு அதிர்ஷ்டமா இல்லை சூர்யாவுக்கு அதிர்ஷ்டமா என்பது படம் வெளியானதும் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...