No menu items!

வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?

வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?

இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ” சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும்” என்று அந்த கவிதையில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் எக்கோ நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இசையமைப்பாளர் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது விசாரணையின் போது ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர் மட்டுமே உருவாக்குவது அல்ல, அது பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து உருவாக்கும் ஒன்று. பாடல் வரிகள் இல்லாமல் எப்படி பாடல் உருவாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து, இன்று ‘நெற்றித் தீ’ எனும் தலைப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை…

மனிதா!
நீ எழுப்பும் இசை
உடலால் விளைவதா?
உயிரால் விளைவதா?

உடலால் எனில்
உயிரை விட்டுவிடப்போமோ?
உயிரால் எனில்
உடலைச் சுட்டுவிடப்போமோ?

உயிர் உந்தி எழாமல்
உடல் சிந்திவிடாமல்
இசையேது இசை?
மொழியேது மொழி?

சுயமென்று ஏதுமில்லை;
எல்லாம் கூட்டியக்கம்
பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ
பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும்


-இவ்வாறு அந்த கவிதையில் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து இந்த கவிதையை வெளியிட்டதும், அது தொடர்பான விவாதம் எக்ஸ் பக்கத்தில் எழுந்திருக்கிறது. இளையராஜாவைதான் வைரமுத்து சொல்கிறார் என்று பலர் பதிவுகள் இடுகிறார்கள்.

மனோராஜு:

அண்ணன் கவிப்பேரரசு அவர்களின் கூற்று உண்மை.எந்தவொரு பணியும் தனியாக இல்லை கூட்டியக்கம் தான் அதிலும் திரைத்துறையில் நடிகர் நடிகை இயக்குநர் தொழில்நுட்பக் கலைஞர் எனப் பலர். பாடலை எடுத்துக் கொண்டால் இசையமைப்பாளர் மட்டும் உரிமை கொண்டாட முடியுமா பாடலாசிரியர் பாடகர் சேர்ந்தால் தான் வெற்றி.

சகா:

பாடலாசிரியர் எழுத்துக்கு உரிமை கோரினால் ? – இது, நேற்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில், நீதிபதி எழுப்பிய கேள்வி. கவிஞர் ஐயா , உங்கள் கவிதை, அந்த கேள்விக்கான பதிலோ..? என தோன்றுகிறது.

டெமாகோகு:

இந்த மாதிரி மனித பொறாமையின் உச்ச காலங்களில், எம்.எஸ் விசுவநாதன் கடவுளாக தெரிகிறார். அவரின் படைப்புகள் அனைவருக்கும் சொந்தம்! நோட்டிசுகள் பறக்காது, வழக்குகள் நடக்காது. இசை மட்டும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கும்.

கந்தர்வன்:

“சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம்” இந்த எதார்த்த உண்மை புரிந்து விட்டால் எவரும் ‘ஞானி’யே.

குளித்தலை மனோ:

நீதிபதி ஆணவத் தலையில் வைக்கும் கொட்டும் கூட ஒரு இசைதான் விடும் அறை கூட ஒரு இசை வடிவம்தான் இசை நம்மை சுற்றி இருக்கிற சப்தங்கள் அதை எவன் தனக்கே உரிமை கொண்டாடுவது ? வான் மழை மண்ணிலும் கடலிலும் ஜலதரங்கம் வாசிக்கிறது அதில் எந்த துளி உன்னுடையது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...