எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாக இடம்பெற்ற காட்சி ஒன்று இருக்கிறது. அநேகமாக 2கே இளையதலைமுறையினருக்கு இப்படியொரு சமாச்சாரம் இருக்கிறதா என்றே தெரியாத ஒன்று அது. கோபத்தில் இருக்கும் மனைவியையோ அல்லது காதலியையோ சமாதானப்படுத்த காதலரோ அல்லது கணவரோ கை நிறைய மல்லிகைப் பூ வாங்கி கொடுப்பார். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கோபம் காணாமல் போய்விடும்.
இந்தளவிற்கு மல்லிகைப் பூவுக்கு பில்டப் கொடுத்த ஒரே சினிமா தென்னிந்திய சினிமாவாகதான் இருக்கும். பெண்களுக்கு காதலரை விட, கணவரை விட மிக பூக்களிடம்தான் ஆசை அதிகம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் பெண்களுக்கும் பூக்கள் என்றால் அலாதி ப்ரியம்தான்.
இந்தளவிற்கு விளக்கமாக சொல்லக் காரணம் சமந்தாவுக்கு இருக்கும் ஒரு வித்தியாசமான பிரச்சினைதான்.
சமந்தாவைச் சந்திக்க நீங்கள் செல்கிறீர்கள் என்றால் சும்மா கைவீசி விட்டு போக முடியாது என்பதற்காகவே ஒரு பூங்கொத்தை வாங்குவீர்கள். அந்த பூங்கொத்தை கொடுத்துவிட்டு, நட்புரீதியாக கைக்குலுக்கிவிட்டு பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் பூங்கொத்தை கொடுத்தால், உங்களுடைய சந்திப்பு அங்கே கேன்சல் ஆக வாய்ப்பிருக்கிறது.
அப்படி என்னதான் பிரச்சினை என யோசிக்கிறீர்களா… ‘பூக்கள் என்றால் அநேகமாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் பூக்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். ஏன் இப்படி பூக்களை பரிசாக கொடுக்கிறார்கள் என்று உள்மனதில் ஒரு தயக்கம் இருக்கும்.