No menu items!

மாரி செல்வராஜ் மீது ரஞ்சித்திற்கு பொறாமையா?

மாரி செல்வராஜ் மீது ரஞ்சித்திற்கு பொறாமையா?

தமிழ் சினிமாவில் இப்போதைய ட்ரெண்டில் பரபரப்பாக முணுமுணுக்கப்படும் பெயர் மாரி செல்வராஜ்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இயக்கிய ‘மாமனிதன்’ பல தளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இதனால் திரும்பி பக்கமெல்லாம் வெவ்வேறு விவாதங்களில் மாமன்னன் பெயர் அடிப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக மறந்து போயிருந்த சாதி, ஆதிக்கம், மாதிரியான பிரச்சினைகளை மீண்டு கையிலெடுத்தவர் பா. ரஞ்சித். தனது சமூகம் சார்ந்த மக்களின் வலி மற்றும் வேதனைகளை படமாக எடுப்பதை தொடங்கி வைத்தவர் பா.ரஞ்சித்.

ஆனால் ‘பரியேறும் பெருமாள்’, அடுத்து ‘கர்ணன்’, இப்போது ‘மாமன்னன்’ என தன்னுடைய மூன்றுப் படங்களின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திருப்பி விட்டார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜூக்கு கிடைத்திருக்கு வரவேற்பும், அங்கீகாரமும் இப்போதைய தமிழ் சினிமாவில் அவரைப் போலவே தனது சமூகம் சார்ந்து படமெடுக்கும் ரஞ்சித்திற்கு கிடைக்கவில்லை. அதனால் பா. ரஞ்சித்திற்கு கொஞ்சம் மனவருத்தம் என்கிறார்கள்.

அதனால்தான் மாரி செல்வராஜை பாராட்டுவது போல, உதயநிதிக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு உங்களது கட்சிக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு வேறுபாட்டை களையுங்கள் என்று கூறியிருக்கிறார். மாரி செல்வராஜின் வளர்ச்சி கொஞ்சம் பொறாமை அடைய செய்திருக்கிறது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.


17 கோடி செலவை இழுத்துவிட்ட அட்லீ!

ஷங்கரைப் போலவே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் காட்டுவதில் அவருடைய சிஷ்யப்பிள்ளை அட்லீயும் கில்லாடிதான்.

தமிழில் விஜயை வைத்து மெர்சல் காட்டிய அட்லீ, இப்போது பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கி அவருடைய பாலிவுட் எண்ட்ரீயையும் சாத்தியமாக்கிவிட்டார்.

இப்படம் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. செப்டெம்பர் 7-ம் தேதி ரிலீஸ் செய்வதற்காக மும்முரமாக இருக்கிறார் அட்லீ.

சமீபத்தில் ஒரு பக்காவான ஆக்‌ஷன் காட்சியொன்றை ஷூட் செய்திருக்கிறது ’ஜவான்’ படக்குழு. ஹைவே ஒன்றில் நடக்கும் சேஸிங் காட்சியாம். இதில் ஒரு காரை மற்றொரு கார் சேஸ் செய்வது போல் அட்லீ எடுக்கவில்லையாம். தன்னுடைய பாணியில் சுமார் 70 ஸ்கார்பியோ கார்கள் துரத்துவது போல, மிகப்பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் அட்லீ.

இந்த சேஸிங் காட்சியுள்ள சண்டைக்காட்சிக்கு மட்டும் சுமார் 17 கோடி செலவாகி இருக்கிறதாம். ‘சண்டைக்காட்சிக்கு 17 கோடியா என வாயைப் பிளந்து இருக்கிறது பாலிவுட் வட்டாரம். ஷாரூக்கான் இதற்கு முன் நடித்து, ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்த ‘பதான்’ படத்தில் கூட இப்படியொரு செலவில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையே என்று பாலிவுட்டில் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.

ஜவான்’ படத்தில் இந்த சேஸிங் ஷாரூக்கான் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என்கிறது ’ஜவான்’ படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...