No menu items!

லால் சலாமுக்குப் பிறகு ஐஸ்வர்யா மறுமணமா?

லால் சலாமுக்குப் பிறகு ஐஸ்வர்யா மறுமணமா?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் படம் ‘லால் சலாம்’ .இந்தப்படம் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

கோலிவுட்டில் இந்தப் படம் ரிலீஸ் பற்றிய பரபரப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் இப்பட த்தில் உதவி இயக்குநராக பணிப்புரிந்தவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும்  படம் வெளியான பிறகு திருமணம் நடக்குமா அல்லது என்ன நடக்கும் என்பது பற்றிய முணுமுணுப்புகள்தான் அதிகம் இருக்கின்றன.

ஐஸ்வர்யாவும் அந்த உதவி இயக்குநரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக ஒரு கிசுகிசு நீண்ட நாட்களாகவே சினிமா வட்டாரத்தில் அடிப்பட்டு வருகிறது. மேலும் ஐஸ்வர்யா அந்த உதவி இயக்குநரைதான் மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக, தந்தை ரஜினியிடம் வெளிப்படையாகவே கூறியதாகவும், இதனால் ரஜினி அதிர்ச்சியடைந்ததாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

வளர்ந்த மகள் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த ரஜினி, இந்த விஷயத்தை ஆறப்போட, முதலில் லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்கிற வேலையைப் பார் என்று மகளிடம் கூறினாராம்.

இப்போது அப்பட ரிலீஸூம் நெருங்கிவிட்டதால். இந்த மறுமணம் பரபரப்பு மீண்டும் தொற்றிக்கொண்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த காதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், யாரும் அதைப்பற்றி வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.


திட்டமிட்டு காய் நகர்த்தும் தனுஷ்

தமிழ் சினிமாவில் இப்பொழுதுள்ள நடிகர்களில், புத்திசாலி, திறமைசாலி, கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் கில்லாடி என இப்படி எல்லா விஷயங்களிலும் ஜித்தனாக இருப்பது தனுஷ்தான் என்கிறது கோலிவுட்.

தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும், மிக பக்காவாக திட்டமிட்டு, செயல்படுத்துவதில் தனுஷ், ரொம்பவே அக்கறை காட்டிவருகிறாராம்.

தமிழ் நட்சத்திரங்களில் ரஜினி, கமல் என இருவருக்கும் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பெயர் இருந்தாலும், அவர்களால் நேரடி ஹிந்திப் படங்களில் இப்பொழுது நடிக்க முடியவில்லை. இவர்களில் ரஜினி படங்களுக்கு ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் ஓரளவிற்கு மதிப்பிருக்கிறது.

மற்ற நடிகர்கள் யாருக்கும் சொல்லிக்கொள்கிற அளவுக்கு ஹிந்தி மார்க்கெட்டில் ஒரு மதிப்பும் இல்லை. இங்கே கொடிகட்டிப் பறக்கும் அஜித், விஜய், போன்ற கமர்ஷியல் ஹீரோக்களுக்கும் கூட அங்கே பெரிய மார்க்கெட் இல்லை. ஆனால் தனுஷூக்கு ஹிந்தி சினிமாவில் ஓரளவிற்கு மார்க்கெட் இருக்கிறது.

அதேபோல் பாலிவுட்டுக்கு அடுத்தப்படியாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் டோலிவுட்டிலும் தனுஷ் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தி இருக்கிறார். தெலுங்கு பேசும் மாநிலங்களில் முன்பு சூர்யாவுக்கும், கார்த்திக்கும் ஒரு வரவேற்பு இருந்தது. அடுத்து விஜய் ஆண்டனிக்கும் ஒரு பெயர் கிடைத்தது. ஆனால் அங்கேயுள்ள இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் இணைந்து விஜய், அஜித் கூட படங்கள் பண்ணியது இல்லை. மேலும் இவர்கள் இருவரும் நேரடி தெலுங்குப்படங்களில் இதுவரை நடித்ததும் இல்லை.

சிவகார்த்திகேயன் இந்த பாணியில், தெலுங்கு இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் மூலம் களமிறங்கினார், அந்த முயற்சி எடுப்படவில்லை. ஆனால் தனுஷ் இங்கே தனது மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தி வருகிறார்.

தெலுங்கு இயக்குநர், தயாரிப்பாளர் என களமிறங்கிய தனுஷின் ‘வாத்தி’, தெலுங்கில் ’சார்’ படம் நன்றாகப் போனதால், அடுத்து நேரடி தெலுங்குப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், இவர் நடிக்கவிருக்கும் டி51 படத்தில், தனது இமேஜை மேலும் உயரச்செய்ய யாராவது ஒரு தெலுங்கு முன்னணி சீனியர் நடிகர் வேண்டுமென தனுஷ் கூறியிருக்கிறாராம்.

இதனால் அந்த தெலுங்கு இயக்குநரும், தெலுங்கு தயாரிப்பாளரும் ஒவ்வொரு சீனியர் நடிகர்களை அணுகி இருக்கிறார்களாம். இவர்களது முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறதாம். இந்தப்படத்தில் தனுஷூக்கு ஜோடி ராஷ்மிகா மந்தானா.

தனுஷ் படத்தில் நாகார்ஜூனா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். கோவாவில் நடக்கவிருக்கும் ஷெட்யூலில் தனுஷூடன் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தனுஷின் இந்த கூட்டல் கழித்தல் கணக்கு மற்ற நடிகர்களில் மத்தியில்  பொறாமையைக் கிளப்பி இருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...