No menu items!

IPL Playoff : குஜராத்தை ஜெயிக்குமா சிஎஸ்கே?

IPL Playoff : குஜராத்தை ஜெயிக்குமா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் 23-ம் தேதி தொடங்குகின்றன. முதலாவதாக நடக்கும் போட்டியில் பலம்வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடவுள்ளது.

இப்போட்டியில் ஆடும் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொள்வோம்..

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் 12-வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது சிஎஸ்கே. இதுவரை நடந்த 16 ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 14 முறை பங்கேற்ற சிஎஸ்கே அணி, அதில் 2 முறை மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை நெருங்காமல் தடுமாறி நின்றிருக்கிறது. இந்த சாதனையை வேறு எந்த அணியும் படைத்ததில்லை.

12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே, இந்த சுற்றில் மொத்தம் 24 போட்டிகளில் ஆடி, 15-ல் வெற்றி கண்டுள்ளது. 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே, 5-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் ப்ளே ஆஃப் சுற்றில் கால் எடுத்து வைக்கிறது.

பலம்:

சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலம் அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்டும், டெவான் கான்வாயும்தான். இந்த தொடரில் இதுவரை 13 ஆட்டங்களில் ஒன்றாக களம் இறங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு மொத்தம் 688 ரன்களைக் குவித்துள்ளது. ஆர்சிபி அணியின் டு பிளஸ்ஸி – விராட் கோலி ஜோடிக்கு அடுத்ததாக மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக இது பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் கான்வாய் 585 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 504 ரன்களையும் குவித்திருக்கிறார்கள். அதேபோல் நிதானமான பேட்ஸ்மேனாக இருந்து இந்த தொடரில் ஸ்டிரைக் ரேட்டில் மின்னல் வீரராக பாய்ந்த ரஹானே, சிக்சர் மழை பொழியும் துபே ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்குக்கு பலம் சேர்க்கிறார்கள்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சில் சுமாரான அணியாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், பதிரணாவின் வருகைக்குப் பின் கொஞ்சம் சீரானது. கடைசி நேரத்தில் தீபக் சாஹரும் இணைய இப்போது முழுமையாக நிமிர்ந்துள்ளது.

பலவீனம்:

ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் இந்த ஐபிஎல்லில் அந்த பெருமை பறிபோனது. ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகமாக உள்ள அணிகள் சென்னையை சுலபமாக வீழ்த்தின. சிஎஸ்கே வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறுவதே இதற்கு காரணம். அதேபோல் பேட்டிங்குக்கு மட்டும் பயன்படுத்தப்படும் ராயுடுவின் பேட்டிங் படு சொதப்பலாக இருக்கிறது.

டாடீஸ் ஆர்மியான சிஎஸ்கேவின் மற்றொரு பலவீனம் அதன் பீல்டிங். வயது முதிர்ச்சியாலோ என்னவோ ருதுராஜ், , ஜடேஜா போன்ற ஒருசில வீரர்களைத் தவிர மற்றவர்கள் பந்தை விரட்டிப் பிடிக்க தடுமாறுகிறார்கள். அணியின் பீல்டிங் இப்படி இருந்தால் ப்ளே ஆஃபில் வெல்ல 200 ரன்களுக்கு மேல் எடுக்கவேண்டி வரும். இது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமையைக் கொடுக்கும்.

குஜராத் டைட்டன்ஸ்:

தங்கள் முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, 2-வது முறையாக தொடர்ந்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.

பலம்:

குஜராத் அணியின் மிகப்பெரிய பலம் அதன் பேட்டிங். கில், ஹர்த்திக் பாண்டியா, சாஹா, மில்லர், திவாட்டியா, விஜய் சங்கர் என ரன்களைக் குவிக்கும் ஏராளமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள ஷமியும் (24 விக்கெட்கள்) ரஷித் கானும் (24 விக்கெட்கள்) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்கள். இதே ஃபார்மை அவர்கள் தொடர்ந்தால் சிஎஸ்கே ரன்களைக் குவிப்பது கஷ்டம்.

பலவீனம்:

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு பெயர்பெற்றது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கானைத் தவிர வேறு சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஃபார்மில் இல்லை. இது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங் ஃபார்மும் அவர்களுக்கு பலவீனமாக உள்ளது.

இந்த பலம் மற்றும் பலவீனங்களைக் கடந்து எந்த அணி வெற்ரி பெறும் என்பது நாளை தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...