No menu items!

தளர்ந்து போன ’இந்தியன் 2’

தளர்ந்து போன ’இந்தியன் 2’

ஷங்கரின் படமென்றால் அதை அவர் விளம்பரத்தும் விதமே வேறு மாதிரி இருக்கும். ஆனால் இந்த முறை ’இந்தியன் 2’ பட ப்ரமோஷன் ரொம்பவே டல்லடிக்கிறது.

ஆனால் மறுபக்கம் கமல் பிரபாஸூடன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ பட விளம்பர நிகழ்ச்சிகள், பேட்டிகளில் மும்முரம் காட்டி வருகிறார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கமல், அமிதாப் பச்சன் இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கமலிடம் ‘இந்தியன் 2’ படம் பற்றி கேட்டார்கள். ஆனால் கமல் பதிலளிக்க மறுத்துவிட்டார். ’நான் இங்கே கல்கி 2898 ஏடி பட சம்பந்தமாக வந்திருக்கிறேன். அதனால் வேறு எந்தப் படத்தையும் பற்றி கேட்காதீர்கள்’ என்று நாசூக்காக மறுத்துவிட்டார் கமல்.

’இந்தியன் 2’ பட வியாபாரமும் எதிர்பார்த்த அளவு சூடுப்பிடிக்கவில்லை என கோலிவுட் வியாபார வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள். போதுமான ப்ரமோஷ இல்லை என்பதே பிரச்சினை என்கிறார்கள். ஷங்கர் படங்களுக்கு செய்கிற விளம்பரங்கள் எளிதில் மக்களைச் சென்றடையும். ஆனால் ஷங்கர் தனது முதல் தெலுங்குப்பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால், இந்தியன் 2 பக்கம் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் ஜூலை 1-ம் தேதியிலிருந்து ‘இந்தியன் 2’ ப்ரமோஷன் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்களாம்.

கில்லியாக திட்டம் போடும் அட்லீ

பாலிவுட்டுக்கு போன முதல் படத்திலேயே ஷாரூக்கானை வைத்து 1000 கோடிக்கும் மேல் வசூலில் கெத்து காட்டிய அட்லீ, விஜயின் 69-வது படத்தை இயக்குவார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது என்று பேச்சு அடிப்பட்டது.

ஆனால் அட்லீ அல்லு அர்ஜூனுடன் இணையப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது. 1000 கோடி வசூலுக்கு உத்திரவாதம் கொடுக்கப் போகிற எனக்கு 80 கோடி சம்பளம் கொடுத்தால்தான் எனக்கு சரியாக இருக்கும் என்று அட்லீ சொல்ல, அல்லு அர்ஜூன் நைசாக கழன்று கொண்டார்.

அப்படியானால் அட்லீயின் அடுத்தப்படம் என்ன?

மீண்டும் பாலிவுட்டுக்கு தான் போகப்போகிறாராம் அட்லீ. இந்த முறை சல்மான் கானை வைத்து படமெடுக்க இருக்கிறாராம். தயாரிப்பு நம்மூர் சன் பிக்சர்ஸ். சில வருடங்களாகவே ஹிந்தியிலும் கால் பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட சன் பிக்சர்ஸூக்கு அந்த வாய்ப்பை கச்சிதமாக முடித்து கொடுத்திருக்கிறார் அட்லீ.

அட்லீ – சல்மான் கான் – சன் பிக்சர்ஸ் கூட்டணி ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாகவே சல்மானுக்கு அட்லீ ஒரு ஒன் லைன்னை சொல்லியிருக்கிறார். அது சல்மானுக்குப் பிடித்து போகவே, இப்போது தனக்கே உரிய பாணியில் காட்சிகளாக அமைத்து, சல்மானிடம் அட்லீ கூறியிருக்கிறாரா . இதுவும் சல்மானை குஷியாக்க, இப்போது திரைக்கதை வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தப்படத்தை ஒரு பக்காவான பான் இந்திய திரைப்படமாக எடுக்க வேண்டுமென திட்டமிடும் அட்லீ, தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் சினிமாவிலிருந்து முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்க போகிறாராம்.

ஷங்கர் மகள் திருமணத்தில் அட்லீயுடன் குத்தாட்டம் போட்ட ரன்வீர் சிங்கும் சல்மான் கானுடன் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பாலிவுட்டில் களமிறங்குவதால், தனது பலத்தைக் காட்ட சன் பிக்சர்ஸூம் உற்சாகமாக களத்தில் இறங்குகிறது.

விமலா ராமனுக்கும் வினய் ராய்க்கும் டும் டும் டும்

தமிழ் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. நட்சத்திரங்கள் காதலித்தால் அதை வெளிப்படையாக சொல்லவே மாட்டார்கள். நாங்கள் நல்ல நண்பர்கள் என்பார்கள். கிசுகிசுக்களைப் பத்தி கருத்து சொல்ல மாட்டார்கள். எப்போது கேட்டாலும் எந்த பேட்டியிலும் அந்த காதலைப் பற்றி மட்டும் பேச மாட்டார்கள். ஆனால் திடீரென நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்பார்கள்.

இந்த காதல் பஞ்சாயத்து பல ஆண்டு பாரம்பரியமாகவே இருந்துவருகிறது. இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட ஜோடி ‘ஜூன் போனால் ஜூலைக் காற்றே’ என இளமைத் ததும்ப அறிமுகமான வினய் ராய் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து நடிப்பதற்காகவே சென்னைக்கு குடிப்புகுந்த விமலா ராமன்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் இருவரும் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஏதோ ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். அதனால்தான் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் என அப்பாவி ரசிகர்கள் பலர் நினைத்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் லிவ் – இன் உறவில் இருந்துவருகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாகவே வினயும், விமலாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த வருடம், நாங்கள் இருவரும் ஜோடி சேர்ந்துவிட்டோம் என வெளிப்படையாக கூறியிருந்தார்கள்.

இந்த லிவ் -இன் உறவில் இருவருக்கும் இடையே இப்போது காதல் மலர்ந்திருப்பதாகவும், இதனால் வாழ்க்கையில் முறைப்படி இணைந்து வாழலாம் என இருவரும் முடிவெடுத்து இருப்பதாகவும் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆனாலும் உடனடியாக திருமணம் இல்லையாம். இன்னும் சில மாதங்கள் பிடிக்குமாம். ஆக ஒரு வழியாக திருமணம் செய்ய இருக்கிறார்கள் விநய் – விமலா ராமன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...