No menu items!

’லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம்’ – நயன்தாரா.

’லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம்’ – நயன்தாரா.

தென்னிந்தியா சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும், தனக்கென்று ஒரு மார்க்கெட்டை வைத்திருக்கும், ஹீரோயினை மையமாக கொண்ட கதைகளில் நடித்து வசூலையும் பார்த்திருக்கும் நயன்தாராவை ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்து அழகுப் பார்த்தது படைப்பாளிகள் வட்டாரம்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்தப் போதே, பல நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியது. மற்றொரு பக்கம், தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத கமர்ஷியல் ஹீரோயினாக திகழ்ந்த விஜய்சாந்தியை அப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தார்கள். அவரும் நயன்தாராவுக்கு பட்டம் கொடுத்து அழகு பார்த்த போது, ‘நான் நடிக்கும் போதேல்லாம் இப்படி சமூக ஊடகங்கள் இல்லை’ என்று லேசாக ஒரு புள்ளியை வைத்தார்.

இப்படியாக சந்தோஷமாக பயணப்பட்ட நயன்தாராவின் புதியப் படமான ‘அன்னபூரணி’ வெளியானது. இப்பட ப்ரமோஷனில் பேசிய நயன்தாரா, ‘இனிமேல் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம். நிறையப் பேர் திட்டுகிறார்கள். பட்டத்தை பத்து பேர் பாராட்டினால் மீதி தொன்னூறுப் பேரும் திட்டுகிறார்கள். அதனால் இந்த பட்டமே வேண்டாம்’ என்று கறாராக சொல்லிவிட்டார்.

ஆனாலும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன்தான் அந்தப் படம் வெளியாகி இருக்கிறது. வரம் கொடுக்கிற சாமியே எனக்கு படையல் வேண்டாம் என்றாலும் கூட, இன்னும் நான்கு மடங்கு அதிகம் படையல் போடுகிற மக்கள் இதை சும்மா விடுவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.


ரஜினியின் ‘லால் சலாம்’ அப்டேட்!

வடிவேலுவின் ‘கிணத்தைக் காணோம்’ காமெடியை போல, ஷூட் செய்த காட்சிகளை ஹார்ட் டிஸ்க்கில் காணவில்லை என்ற ஒரு பெரும் சர்ச்சை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படக்குழுவில் கிளம்பியது.

ஷூட் செய்த முக்கிய காட்சிகளை ஹார்ட் டிஸ்க்கில் ரிக்கவர் செய்ய முடியாததால், மீண்டும் அந்தக் காட்சிகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஐஸ்வர்யா உள்ளானதாக அப்படக்குழுவினர் கூறுகிறார்கள்.

ஐஸ்வர்யா இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியாமல் இருந்த தயாரிப்பு தரப்பு, குறையும் சொல்ல முடியாமல் தவித்தது.

இந்நிலையில், ஐஸ்வர்யா சில காட்சிகளை மீண்டும் ஷூட் செய்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ரஜினியின் மார்க்கெட் நன்றாக இருப்பதால், தைரியத்துடன் ரீ-ஷூட் செய்திருக்கிறார்களாம். சென்னை, காஞ்சிப்புரம் பகுதிகளில் இதற்காக லொகேஷன்களை தேடிப்பிடித்து ஷூட் செய்திருக்கிறார்கள்.

ஷூட் செய்த காட்சிகள் ஐஸ்வர்யாவுக்கு திருப்தியாக வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்., இதனால் கொஞ்சம் டென்ஷனான ரஜினி, இப்போது ரிலாக்ஸாகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


தனுஷ் போடும் கலர்ஃபுல் கண்டிஷன்!

தனுஷ் தன்னுடைய மார்க்கெட்டை இந்திய முழுவதும் விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ், அப்படியே ஹிந்தி சினிமா பக்கம் போனார். அடுத்து ஆங்கில படமொன்றிலும் நடித்தார். பிறகு தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நேரடி தெலுங்குப்படமொன்றிலும் நடித்தார். இப்படி அவர் தனது மார்க்கெட்டை விரிவாக்கம் செய்வதை அவரது படங்களின் வரிசையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.

‘கேப்டன் மில்லர்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கும் தனுஷ், அடுத்த தான் இயக்கும் தனது ஐம்பதாவது படத்திலும், அதற்கு அடுத்து தெலுங்கு இயக்குநரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

இப்படி தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகும் தனுஷ் போடும் ஒரே கண்டிஷன், இந்தப்படம் நேரடி தெலுங்குப் படமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் கண்டிப்பாக வெளியாக வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறாராம்.
அடுத்து ஒரு கண்டிஷன் தனுஷ் இதுவரை நடிக்காத ஹீரோயின்களைதான் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கிறாராம்.

இந்த கோரிக்கையின்படி தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் டி51 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படம் அரசியல் மாஃபியாவை பின்புலமாக கொண்ட கதை என்கிறார்கள். இதன் ஷூட்டிங் வருகிற ஜனவரியில் மும்பையில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...