No menu items!

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.

அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால், உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரியா மரணம்மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் – உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது 17). ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்த பிரியா தினமும் கால்பந்து விளையாட்டிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சையில் நிகழ்ந்த தவறால் கால் தொடர்ந்து வீங்கி வலியும் அதிகரித்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை காப்பாற்ற மருத்துவர்கள் குழு கடுமையாக போராடியபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.15 மணியளவில் பிரியா பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீர்காழி வெள்ளப் பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை நேரில் ஆய்வு

சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில்  கனமழை பெய்தது.  இந்த மழை காரணமாக  சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.  இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சீர்காழி அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஆச்சாள்புரம் கொடிவேலி மேட்டுத்தெரு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

டி20 கிரிக்கெட் தரவரிசை: சூர்யகுமார் முதலிடம்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் சூர்யகுமார் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்தின் டெவோன் கான்வே 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன் இந்த பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...