No menu items!

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: 5 பேர் கைது

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: 5 பேர் கைது

திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இதற்கிடையே 22ஆம் தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு,  சென்னையில் இருந்து காரில் சென்றார். கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், இம்ரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர் தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

தாயார் உடலை சோகத்துடன் தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாயார் மறைவையத் தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத் விரைந்தார். அங்கு தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி தாயாரின் இறுதிச் சடங்கு அகமாதபாத்தில் இன்று காலை 9.30 மணியளவில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. வீட்டில் வைத்து தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து ஹீராபென்னிற்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் பிரதமர் மோடியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் தனது தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு சடங்குகளுக்கு பின்னர், தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, தாயார் உயிரிழந்ததை பிரதமர் மோடியே முதன்முதலில் அறிவித்தார். “ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும் தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் என் தாயிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்று 100வது பிறந்தநாளின்போது சந்தித்த போது என் தாய் சொன்ன வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டார்.

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

இந்த சூழலில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். பிபா (FIFA) உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆண் நண்பருடன் ஊர் சுற்ற தாயிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மகள்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் நேற்று இரவு தனது தாயின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, “என்னை மர்ம நபர்கள் கடத்தி வைத்து உள்ளனர். ரூ.50 ஆயிரம் பணத்தை நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே விடுவிப்பார்கள். எனது செல்போனையும் பிடுங்கி வைத்து உள்ளனர்” என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், கடத்தல் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்தனர். இதில் பேசியநபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கடத்தல் நபர்கள் பூந்தமல்லி அருகே இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே மலையம்பாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே ஒரு இடத்தில் நின்ற இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்ததில், ஆண்நண்பரிடம் ஜாலியாக ஊர்சுற்றி செலவு செய்ய தாயிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று நாடகமாடியதாக தெரிவித்தார். இதையடுத்து இளம் பெண், அவரது தோழிகள், ஆண் நண்பரையும் போலீசார் எச்சரித்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...