No menu items!

ஈரோடு இடைத் தேர்தல்: ஜி.கே. வாசன் – அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு இடைத் தேர்தல்: ஜி.கே. வாசன் – அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள், இன்று தமாகா தலைவர் வாசனை சந்தித்து பேசினர். அதிமுக சார்ப்பி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பா. வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “கடந்த முறை நாங்கள் போட்டியிட்டோம்; இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் இலக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான். வெற்றி வியூகத்தை வகுக்கவே அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தோம். திமுக அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் நாளுக்கு நாள், நொடிக்கு நொடிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன. இரண்டொரு நாளில் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம்” என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி: சீமான் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் இறங்குகிறது. தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம். நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன்” என்று கூறினார்.

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு

திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகினது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் போடப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல்: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார்

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகாட், “பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பெண் மல்யுத்த வீரர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய 10-20 சம்பவங்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்த ஒரு விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...