No menu items!

ரோஹித் சர்மாவுக்கு No சொன்ன தோனி

ரோஹித் சர்மாவுக்கு No சொன்ன தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மாவை சேர்ப்பதற்கு தோனி எதிர்ப்பு தெரிவித்தார் என்ற செய்திதான் இப்போது கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக். அக்டோபரில் தொடங்கவுள்ள  உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்த செய்தி வெளியாகி ரோஹித் சர்மாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான அணியில்தான் ரோஹித் சர்மாவைச் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தோனி. அப்போது தேர்வுக் குழுவில் அங்கம் வகித்திருந்த ராஜா வெங்கட்தான் இந்த தகவலை கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ராஜா வெங்கட் கொடுத்த பேட்டி ஒன்றில், “2011-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் ஆடும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தேர்வுக் குழுவின் அப்போதைய தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பாவே மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் அந்த கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டனர். இப்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அந்த அணியுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு  சென்றிருந்ததால் நானும் மற்றொரு தேர்வாளரான யஷ்பால் சர்மாவும் ஆன்லைன் வாயிலாக அந்த கூட்டத்தில் பங்கேற்றோம். கேப்டன் தோனியும், பயிற்சியாளர் கிர்ஸ்டனும் ஆன்லைன் மூலம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல் 14 வீர்ர்களின் பெயர்கள் எந்த விவாதமும் இல்லாமல் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. 15-வது வீர்ராக ரோஹித் சர்மாவின் பெயரை தேர்வாளர்களான நாங்கள் முன்வைத்தோம். பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டனும் இதை உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் தோனி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதால் அணியில் கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னர் வேண்டும் என்று கூறிய அவர், பியூஷ் சாவ்லாவின் பெயரை முன்மொழிந்தார். ரோஹித் சர்மாவின் பெயரை தோனி நிராகரிதத்தும், கிர்ஸ்டன் அவர் பக்கம் சேர்ந்துகொண்டார். அணிக்கு ரோஹித் சர்மா வேண்டாம். பியூஷ் சாவ்லாவே இருக்கட்டும் என்றார்.

அவர்கள் இருவரும் ஒரே கருத்தைச் சொன்னதால் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை தேர்ந்தெடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

தேர்வுக்குழு கூட்டத்தில் வாதாடி பியூஷ் சாவ்லாவை சேர்த்தபோதும், உலக்க் கோப்பையில் 3 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தோனி. அந்த 3 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 4 விக்கெட்களை மட்டுமே பியூஷ் சாவ்லா எடுத்திருக்கிறார்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் திறமையில் தோனிக்கு நம்பிக்கை இல்லை என்று அவரது எதிர்ப்பாளர்கள், குறிப்பாக விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதேநேரத்தில் ரோஹித்தின் ஆதரவாளர்களோ, “ரோஹித் சர்மா மீது தோனிக்கு அபார நம்பிக்கை உள்ளது. ஆனால் அந்த உலகக் கோப்பை போட்டி நடந்தபோது ரோஹித் சர்மா இளம் வீர்ர். அத்துடன் போட்டி இந்தியாவில் நடந்த்தால் ஒரு ஸ்பின்னரை தேர்வு செய்தார். பிற்காலத்தில் அதே தோனிதான் ரோஹித் சர்மாவை தொடக்க ஆட்டக்கார்ராக களம் இறக்கினார். 2013-ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ரோஹித்தும் அந்த தொடரில் சிறப்பாக ஆடி இந்தியா கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்” என்று பதிலுக்கு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் அணித் தேர்வு குறித்த ரகசியங்களை தேர்வாளர்கள் வெளியிட்டு வீண் குழப்பத்தை ஏர்படுத்தலாமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. எதிர்காலத்தில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இப்படி பத்திரிகைகளிடம் பேசி அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பிசிசிஐ பார்த்துக்கொள்வது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...