மையோசிடிஸ் என்கிற ஆட்டோஇம்யூன் பிரச்சினைக்கு சிகிச்சைப் பெற, சினிமாவுக்கு ஒரு தற்காலிக இடைவெளி விட்ட சமந்தா மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.
இந்தியாவுக்கு வந்தவர் அவருடைய சொந்த ஊரான நங்கநல்லூர் பக்கமோ அல்லது தனது ஜாகையை மாற்றியிருக்கும் ஹைதராபாத் பக்கமோ தென்படவில்லை. ஆனால் பாலிவுட்டை குறிவைத்து மும்பையில் வட்டமடித்தபடியே இருக்கிறார்.
வெமையோசிடிஸ் சிகிச்சைக்காக எடுத்த இடைவெளியை சரி கட்டும் வகையில் புதிய வாய்ப்புகளை பிடிப்பதற்காகதான் இப்போது மும்முரமாக இருக்கிறாராம். ப் சிரீஸ்களை குறிவைத்தே அவர் மும்பையில் இருந்து வருகிறார் என்கிறது அவருக்கு நெருங்கி நட்பு வட்டாரம்.
சமந்தாவை படாதப்பாடு படுத்திய மையோசிடிஸ் பிரச்சினையை எப்படி சமாளித்தார் என்று கேட்டால், க்ரையோதெரபி ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ரத்த ஓட்டம் மேம்படும், அவசியமான ஹார்மோன்களை சுரக்க செய்யும். இதனால் மையோசிடிஸ் பிரச்சினை படிப்படியாக குறையுமாம்.
இந்தியாவில் இங்கிருந்தபடியே இப்போது க்ரையோதெரபியை தொடர்கிறாராம் சமந்தா.
ஹீரோக்களின் சம்பளம் பிரச்சினையே இல்லை – அல்லு அரவிந்த்
அநேகமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பஞ்சாயத்து கமர்ஷியல் ஹீரோக்களின் சம்பளம்தான்.
இருநூறு கோடிகள் பட்ஜெட்டில் படமெடுத்தால், அதில் 150 கோடி ரூபாய் வரை ஹீரோவின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. படம் நஷ்டமடைந்தால், ஹீரோ தப்பித்துவிடுவார். தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதனால் செலவைக் கட்டுப்படுத்த நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், புஷ்பா படத்தில் ‘ஃப்யராக’ வெறித்தனம் காட்டி நடித்தாரே அல்லு அர்ஜூன், அவருடைய அப்பா அல்லு அரவிந்த் பேசியதுதான் இப்போது ட்ரெண்ட்டிங்.
‘பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட இப்போது படங்கள் தயாரிப்பது இல்லையே. என்ன காரணம்’ என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.
‘செலவுதான்’ என்று ஒரே வரியில் பதிலைச் சொல்லியிருக்கிறார் அல்லு அரவிந்த்.
உடனே ‘செலவு அதிகமாக காரணம் ஸ்டார் ஹீரோக்களின் சம்பளம்தான் என்று சொல்லப்படுதே’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டார்கள்.
’புஷ்பா’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜூன் தனது சம்பளத்தை பல மடங்கு அதிகமாக்கி இருக்கிறார். இதனால் அவருடைய அப்பா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என காத்திருந்தது கூட்டம்.
’ஒரு படத்தோட செலவுல 20 முதல் 25 சதவீதம்தான் ஸ்டார் ஹீரோக்களுக்கு சம்பளமாக போகுது. அதனால் அவங்க சம்பளம், படத்தோட செலவு அதிகமாக காரணமில்ல. ஆனால் ஸ்டார் ஹீரோக்கள் பெரும் பட்ஜெட் படங்கள்ல நடிக்கிறாங்க அவ்வளவுதான். ஆனால் ரசிகர்கள் பிரம்மாண்டமான படமாகவோ, பெரும் பட்ஜெட் படமாகவோ இல்லைன்னா ஏத்துகிறது இல்ல. அதுல யார் நடிச்சிருந்தாலும் அவங்க அதை கண்டுக்கிறது இல்ல’ என்று கூறியிருக்கிறார்.