No menu items!

மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்

மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்

‘இந்தியா: மோடி கேள்வி’ என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி தயாரித்துள்ளது. முதல் பாகம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப்பட்டது. இரண்டாம் பாகம் ஜனவரி 24 அன்று ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாரதிய ஜனதா கட்சியின் பதவிகளில் இருந்து உயர்ந்து குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது வரையிலான நரேந்திர மோடி கடந்து வந்த அரசியலின் முதல் படிகளை இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதி விவரிக்கிறது. குறைந்தது 2000 பேர் கொல்லப்பட்ட வன்முறையின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசிக்கு கிடைத்த, இதுவரை வெளியிடப்படாத அறிக்கையை இந்த ஆவணப்படம் முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது. இந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். குஜராத் வன்முறைக்கு மோடி நேரடியாக பொறுப்பு என்று கூறும் வெளியுறவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் கருத்துகளுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சூனக்  உடன்படுகிறாரா என்றும், “இந்தக் கொடிய இனச் சுத்திகரிப்பு செயலில் அவர் ஈடுபட்டதைப் பற்றி வெளியுறவு அலுவலகத்திற்கு இன்னும் என்ன தெரியும்” என்றும் கேட்டார். “எம்.பி. முன்வைத்த சித்தரிப்பில் உடன்படவில்லை என்று பிரதமர் ரிஷி சூனக் இதற்குப் பதில் அளித்தார். மேலும், “பிரிட்டன் அரசின் நிலைப்பாடு தெளிவானது, நீண்டகாலமாக நீடித்திருப்பது. அது மாறவில்லை. எங்கும் துன்புறுத்தலை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், மரியாதைக்குரியவர் விவரிக்கும் சித்தரிப்புடன் நான் முற்றிலுமாக உடன்படவில்லை.” என்றும் சுனக் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி: ஜிகே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார். முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

பழனி கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்” என்று கூறினார்.

சவரன் ரூ. 43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: கிராம் ரூ. 5,325-க்கு விற்பனை

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து வருகிறது. சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் ரூ. 39 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் சவரன் 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்று சவரன் ரூ.42,320 ஆக இருந்தது. இன்று இது ரூ. 42,600 ஆக உயர்ந்தது. இன்று சவரன் ரூ. 280 அதிகரித்து இருக்கிறது. கிராம் நேற்று ரூ.5,290-க்கு விற்பனை ஆனது. இன்று இது உயர்ந்து ரூ.5,325 க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...