No menu items!

1949ல் முத்தக் காட்சி – அதிர வைத்த அஞ்சலி தேவி!

1949ல் முத்தக் காட்சி – அதிர வைத்த அஞ்சலி தேவி!

அந்தக் கால நடிகைகளில் நடிப்பாற்றலும், அழகும், இனிய குரலும் கொண்டவர் அஞ்சலி தேவி. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் அஞ்சலிதேவியின் வாழ்வின் சில பக்கங்கள்.

ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த அஞ்சலிதேவி, தன்னுடைய 8 வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கு நாடகங்களுக்கு இசையமைத்து வந்த ஆதிநாராயணராவ் என்பவரிடம் அஞ்சலிதேவியை அவரது தந்தை ஒப்படைத்து விட்டார். பின்னர் அவரிடமே வளர்ந்து, பெரியவளாகி அவரையே திருமணம் செய்து கொண்டார் அஞ்சலிதேவி.

18 வயதில் தான் திரையுலகில் நுழைந்ததைப் பற்றி சொல்லும் அஞ்சலிதேவி, “ ஒரு நாள் என் கணவரைத் தேடி பிரபல டைரக்டர் சி. புல்லையா வந்தார். ‘நான் கொல்ல பாமா என்று ஒரு தெலுங்கு படம் எடுக்கிறேன். அதில் ஒரு மோகினி வேடம் இருக்கிறது. அந்த வேடத்துக்கு உங்கள் மனைவி ரொம்ப பொருத்தமாக இருப்பார்’ என்று தயங்கியபடி சொன்னார்.

நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். என் கணவர்தான் என்னை வற்புறுத்தி நடிக்கவைத்தார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக நெப்டியூன் ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் ஏதோ வித்தியாசமான உலகத்தில் நுழைவதுபோல் இருந்தது. எனக்கு மேக்கப் போட்டு வெள்ளை நிறத்தில் தேவதை மாதிரி உடை அணிவித்தார்கள். அப்போது என் அருகில் அமர்ந்த இயக்குநர் தயங்கித் தயங்கி காட்சியை விவரித்தார்.

அது முத்தக் காட்சி என்பதால் நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். இதைப்பார்த்து யூனிட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இயக்குநர் என் கணவனிடம் போய் முறையிட்டார்.

அவர் என்னிடம் வந்து. ‘இந்த முத்தக் காட்சியில் நாயகன் நிஜமாகவே உன் கன்னத்தில் முத்தம் கொடுக்க மாட்டார். கொஞ்சம் தலையை சாய்த்து போஸ் கொடுத்தால் போதும். அவருடைய விரல் கூட உன் மீது படாது. மற்றதை கேமராமேன் பார்த்துக் கொள்வார். என்று என்னை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்தார்” என்கிறார்

அஞ்சலி தேவி நாயகியாக நடித்த முதல் படம் ‘ஆதித்தன் கனவு’. 1949ல் வெளிவந்தது. இப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் டைரக்ட் செய்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்லும் அஞ்சலிதேவி, “எம்ஜிஆருடன் 5 படங்கள் நடித்திருப்பேன். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று எம்ஜிஆர் என்னை அழைத்தார். ‘அஞ்சலிம்மா உங்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு தரலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். இது என்னோட தனிப்பட்ட முடிவு கிடையாது. எல்லோரும் உங்க பெயரை சிபாரிசு செய்தார்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உங்களை நியமித்து உள்ளோம்’ என்றார் எம்ஜிஆர்.

‘ எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. தலைவர் பொறுப்பில் இருந்து பழக்கமில்லை, வேண்டாம்’ என்று நான் ஒதுங்கினாலும் அவர் விடவில்லை. பிறகு ஒரு வருடம் நடிகர் சங்க தலைவராக இருந்தேன்.

சிவாஜியுடன் அதிக படங்களில் நடிக்கவில்லை. ‘பூங்கோதை’. ‘ நான் சொல்லும் ரகசியம்’, ‘முதல் தேதி’, ‘பக்த துக்காராம்’ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தேன்.

‘ துக்காராம்’ என்றொரு சொந்த படம் எடுத்தேன். இதில் கிளைமாக்ஸில் ஒரு சண்டைக் காட்சி. அந்த சமயம் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த அவர் என்னிடம் போனில் நாளைக்கு காலை 7 மணிக்கு எல்லாம் மெட்ராஸ் வந்து விடுவேன். நேரா உங்க ஷூட்டிங் தான் வரேன். ரெடியாயிருங்க” என்றார்.

கிண்டியில் கிட்டதட்ட 100 ஜூனியர் ஆர்டிஸ்ட். நிறைய குதிரைகள் பைட்டர்ஸ் எல்லோருமே ரெடி. சொன்னது போல ஏர்போர்ட்டில் இருந்து நேராக ஸ்பாட்டுக்கு வந்து விட்டார் சிவாஜி. மேக்கப் போட்டு முடித்து குதிரை மீது ஏறி உட்கார போனவர் அப்படியே மயங்கி தரையில் விழுந்துவிட்டார். பேச்சே இல்லை நான் அப்படியே அலறி அழுதுவிட்டேன். முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் கண் விழித்து பார்த்தவர். அஞ்சலிமா பயந்திடாதே எனக்கு ஒண்ணும் இல்லே என்றார் செய்கையாக. எனக்கு இன்னும் பயம் அதிகமானது. நான் ஷூட்டிங் கேன்சல் செய்றேன் என்றேன்.
” அதெல்லாம் கேன்சல் கிடையாது. என்று அதட்டலாக குரல் கொடுத்தார் சிவாஜி.

காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணி வரை நடித்துக் கொடுத்தார்.

பேக் கப் சொன்னவுடன் நேராக என்னிடம் வந்தார்.

‘அஞ்சலிமா இன்னிக்கு ஒரு நாள் தான் என் கால்ஷீட் ஃப்ரீயா இருக்கு, நான் நடித்து கொடுத்துட்டா உங்களுக்கு ஒரு வேலை முடியும்.படம் ரிலீஸ் பண்ணிடலாம். அதற்காகத்தான் கேன்சல் செய்யாதீர்கள்னு சொன்னேன்’ என்றார். அதுதான் நடிகர் திலகம்” என்கிறார் அஞ்சலிதேவி.

ஜெமினி கணேசனைப் பற்றிச் சொல்லும் அஞ்சலிதேவி, “நான், சாவித்திரி, ஜமுனா. கிருஷ்ணகுமாரி எல்லோரும் ஒரு டீம். ஜெமினி சாவித்ரியை விரும்பியது எங்களுக்கு அப்போதே தெரியும். கணவனே கண்கண்ட தெய்வம் படத்தை அப்படியே ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள் அதிலும் நானும் ஜெமினியும் தான் ஜோடி. படம் முடிந்த டப்பிங் பேசும்போது எனக்கு டப்பிங் பேச வேறு ஒருவரை ஏற்பாடு செய்து விட்டார் தயாரிப்பாளர். இதைக் கேள்விப்பட்டு ஜெமினி ஒப்புக்கொள்ளவே இல்லை இந்தியிலும் அஞ்சலிதேவி தான் டப்பிங் பேசியாக வேண்டும் என்று சொல்லி என்னைப் பேசவைத்தார்.

ஜெமினியிடம் எனக்கு பிடித்த விஷயம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் துளி கூட பந்தா செய்ய மாட்டார். எல்லோரிடமும் சிரித்து பேசுவார்.

இப்போது ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரிய பங்கு ஹீரோவின் சம்பளத்துக்கே செலவாகிறது. எங்க காலத்தில் அப்படி கிடையாது ஹீரோ சம்பளம் 25லிருந்து 80 ஆயிரம் வரைதான். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம் ஜி ஆர் ஒரு லட்சம் வாங்கினார் . இது கூட அவர் கேட்காமல் தயாரிப்பாளராக கொடுத்ததுதான்.

நான் ஹீரோயினாக நடித்த முதல் படத்தில் எனக்கு மாத சம்பளம் 1116 ரூபாய் இதில் இன்கம்டேக்ஸ் கரெக்டாக கட்டுவேன். . இன்றைக்கு புதுசாக நடிக்க வருகிம் பெண்கள் இரண்டாவது படத்திலேயே இவ்வளவு லட்சம் சம்பளம் குடுங்க டிமாண்ட் செய்யறாங்கன்னு கேள்விப்பட்டேன். குறைந்த ஆடை. நிறைந்த வருமானம் சிரிப்புதான் வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலிதேவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...